Indian Bank Attendant Recruitment 2025: தமிழ்நாட்டில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender (அட்டெண்டர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Bank Attendant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியன் வங்கி |
காலியிடங்கள் | Attender (அட்டெண்டர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.04.2025 |
பணியிடம் | திருவண்ணாமலை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.indianbank.in/career/ |
Indian Bank Attendant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
Attender (அட்டெண்டர்) | 01 |
Indian Bank Attendant Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் வங்கி அட்டெண்டர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் அறிந்திருக்க வேண்டும்.
Indian Bank Attendant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்தியன் வங்கி அட்டெண்டர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தது 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்கவும் வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Bank Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்தியன் வங்கி அட்டெண்டர் பணிக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சேவை மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ.1,000/- ஆண்டு செயல்திறன் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அறிவிப்பு அடிப்படையில் மாதம் ரூ.1,000/- பயணத்தொகை (FCA) மற்றும் மாதம் ரூ.300/- மொபைல் தொகை வழங்கப்படும்.
Indian Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கி அட்டெண்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Bank Recruitment 20255 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Indian Bank Attendant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பிக்க விரும்புவோர் www.indianbank.in என்ற இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்யவும். பின்னர், கேட்கப்பட்டுள்ள அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் அதனுடன் இணைத்து, “The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No.143 / 73, 1st Floor, Ramalinganar Main Road, Tiruvannamalai – 606 601” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது குறிப்பிட்ட கடைசி தேதிக்குப் பிறகு வந்தாலோ, அவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025