Tuesday, May 20, 2025
HomeB.E/B.Techரூ.56,100 சம்பளத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை - 400 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்...

ரூ.56,100 சம்பளத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை – 400 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் NPCIL Recruitment 2025

NPCIL Recruitment 2025: இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL) காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட்
(Nuclear Power Corporation of India Ltd – NPCIL)
காலியிடங்கள்400
பணிExecutive Trainees
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.04.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://npcilcareers.co.in/

NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Executive Trainee – Mechanical150
Executive Trainee – Chemical60
Executive Trainee – Electrical80 
Executive Trainee – Electronics45 
Executive Trainee – Instrumentation20
Executive Trainee – Civil45
மொத்தம்400

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறிப்பிட்ட ஆறு பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி (பொறியியல்) அல்லது ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் GATE 2023 அல்லது GATE 2024 அல்லது GATE 2025 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம். கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வித் தகுதிகள் மாறுபடும்.

இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு:

  • பொது / EWS பிரிவினர்: அதிகபட்ச வயது 26 ஆண்டுகள்.
  • OBC (NCL) பிரிவினர்: அதிகபட்ச வயது 29 ஆண்டுகள்.
  • SC / ST பிரிவினர்: அதிகபட்ச வயது 31 ஆண்டுகள்.
  • PwBD பிரிவினர்: அதிகபட்ச வயது 36 ஆண்டுகள்.

வயது தளர்வு விவரங்கள்:

  • SC / ST பிரிவினர்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • OBC பிரிவினர்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • PwBD (Gen / EWS) பிரிவினர்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • PwBD (SC / ST) பிரிவினர்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 15 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • PwBD (OBC) பிரிவினர்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 வழங்கப்படும்.

NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்கள் GATE 2023, GATE 2024 மற்றும் GATE 2025 ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இரண்டு முறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்:

  • பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவ வீரர்கள் / PWD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – ரூ. 500/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் https://www.npcilcareers.co.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments