RRB ALP Recruitment 2026: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள 11,127 உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI, சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ (Diploma) அல்லது பொறியியல் பட்டம் (Engineering Degree) முடித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200/- வரை சிறப்பான சம்பளம் வழங்கப்படவுள்ள நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14.06.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; மேலும் வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.
RRB ALP Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
| காலியிடங்கள் | 11,127 |
| பணிகள் | Assistant Loco Pilot (ALP) உதவி லோகோ பைலட் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 14.06.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbapply.gov.in/ |
RRB ALP Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இரயில்வே துறை உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| உதவி லோகோ பைலட் (ALP) | 11,127 |
மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:
| RRB / Zone | காலியிடங்கள் |
| அகமதாபாத் (WR) | 147 |
| அஜ்மேர் (NWR) | 600 |
| அஜ்மேர் (WCR) | 118 |
| பிரயாக்ராஜ் (NCR) | 457 |
| பிரயாக்ராஜ் (NR) | 153 |
| பெங்களூர் (SWR) | 200 |
| போபால் (WCR) | 423 |
| போபால் (WR) | 30 |
| புவனேஸ்வர் (ECoR) | 801 |
| பிலாஸ்பூர் (CR) | 322 |
| பிலாஸ்பூர் (SECR) | 200 |
| சந்தீகர் (NR) | 187 |
| சென்னை (SR) | 186 |
| கோரக்பூர் (NER) | 105 |
| கவுகாத்தி (NFR) | 676 |
| ஜம்மு – ஸ்ரீநகர் (NR) | 400 |
| கொல்கத்தா (ER) | 344 |
| கொல்கத்தா (SER) | 497 |
| மால்டா (ER) | 270 |
| மால்டா (SER) | 289 |
| மும்பை (CR) | 1078 |
| மும்பை (SCR) | 78 |
| மும்பை (WR) | 37 |
| முசாபர்பூர் (ECR) | 42 |
| பாட்னா (ECR) | 103 |
| ராஞ்சி (ECR) | 555 |
| ராஞ்சி (SER) | 745 |
| செக்கந்தராபாத் (ECoR) | 824 |
| செக்கந்தராபாத் (SCR) | 596 |
| சிலிகுரி (NFR) | 600 |
| திருவனந்தபுரம் (SR) | 64 |
| மொத்தம் | 11127 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRB ALP Recruitment 2026 கல்வித் தகுதி
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
- மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
- மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த கல்வித்தகுதியானது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ள உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கானதாகும்.
RRB ALP Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
இரயில்வே துறை உதவி லோகோ பைலட் (ALP) பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வயது தகுதியானது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ள உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கானதாகும்.
RRB Recruitment 2026 சம்பள விவரங்கள்
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மத்திய அரசு ஊதிய கமிஷன் 7-வது ஊதியத்தின் அடிப்படையில் லெவல் 2-சம்பளம் அளிக்கப்படும். அதாவது ஆரம்ப சம்பளமே ரூ.19,900 முதல் வழங்கப்படும். இதுபோக இதர சலுகைகளும் உண்டு.
Railway Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (CBT) நடைபெறும். CBT தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். CBT 1 மற்றும் CBT 2 என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். கணினி வழி தேர்வுக்கு அடுத்தபடியாக, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த தேர்வு முறையின் மூலம், விண்ணப்பதாரர்களின் திறமையும், உடல் தகுதியும் சோதிக்கப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RRB ALP Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதினால் முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இந்த லோகோ பைலட் பணியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்.ஆர்.பி) இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.05.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள்: 14.06.2026
RRB ALP Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
Railway Recruitment Board (RRB) Assistant Loco Pilot (ALP) வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- இணையதளம்: முதலாவதாக, ரயில்வே தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in அல்லது சென்னை மண்டலத்திற்கான rrbchennai.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
- பணியைத் தேர்ந்தெடுத்தல்: முகப்புப் பக்கத்தில் உள்ள “CEN 01/2026 – Assistant Loco Pilot (ALP)” என்ற அறிவிப்பைத் (Notification) தேர்வு செய்யவும்.
- புதிய கணக்கு உருவாக்குதல் (Registration): “Apply Online” என்பதை க்ளிக் செய்து, உங்களது நடப்பில் உள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை (Email ID) உள்ளிட்டு புதிய கணக்கை உருவாக்கவும்.
- உள்நுழைதல் (Login): உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட பதிவு எண் (Registration ID) மற்றும் கடவுச்சொல்லைக் (Password) கொண்டு லாகின் செய்யவும்.
- விவரங்களை நிரப்புதல்: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதிகளைப் பிழையின்றி நிரப்பவும்.
- ஆவணங்கள் பதிவேற்றம்: உங்களது அண்மைய புகைப்படம் (Photo), கையெழுத்து (Signature) மற்றும் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களைக் குறிப்பிட்ட அளவு மற்றும் வடிவத்தில் பதிவேற்றம் செய்யவும்.
- கட்டணம் செலுத்துதல்: உங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது யுபிஐ (UPI) மூலமாக ஆன்லைனில் செலுத்தவும்.
- சமர்ப்பித்தல் (Submit): விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை இறுதிமுறை சரிபார்த்து விண்ணப்பத்தை “Submit” செய்யவும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







