Coimbatore DHS Recruitment 2026: தமிழ்நாடு அரசு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், குடும்ப நல அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள Multipurpose Hospital Worker, Cleaner, Programme – Administrative Assistant, Staff Nurse, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப மொத்தம் 152 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 8-ஆம் வகுப்பு, ANM, DGNM, B.Sc Nursing, B.E (IT), MBBS தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களின் நகல்களுடன் வரும் 15.06.2026 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். இப்பதவிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகளைக் கீழே விரிவாகக் காணலாம்.
Coimbatore DHS Recruitment 2026 – Job Overview
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | District Health Society, Coimbatore மாவட்ட சுகாதார சங்கம், கோயம்புத்தூர் |
| காலியிடங்கள் | 236 |
| பதவியின் பெயர் | Multipurpose Hospital Worker, Cleaner, Medical Officer (UHWC), Health Inspector GrII (UHWC), Staff Nurse (UHWC), ULB-UHN, Health Inspector GrII (MTM), Dental Technician (DEIC), Optometrist (DEIC), Mid Level Health Provider (MLHP), Data Manager (IDSP), Programme – Administrative Assistant, Occupational Therapist (DEIC), Sanitary Worker (SNCU), CEmONC Security Guard |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 15.06.2026 |
| பணியிடம் | கோயம்புத்தூர் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://coimbatore.nic.in/ |
Coimbatore DHS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு Coimbatore DHS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் |
| Medical Officer (UHWC) | 11 |
| Health Inspector Gr II (UHWC) | 09 |
| Staff Nurse (UHWC) | 08 |
| ULB-UHN | 85 |
| Health Inspector Gr II (MTM) | 11 |
| Mid Level Health Provider (MLHP) | 03 |
| Data Manager (IDSP) | 01 |
| Programme – Administrative Assistant | 01 |
| Cleaner | 03 |
| Multipurpose Hospital Worker | 13 |
| Dental Technician (DEIC) | 01 |
| Optometrist (DEIC) | 01 |
| Occupational Therapist (DEIC) | 01 |
| Sanitary Worker (SNCU) | 02 |
| CEmONC Security Guard | 02 |
Coimbatore DHS Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) |
| Medical Officer (UHWC) | MBBS பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். |
| Health Inspector Gr II (UHWC) | 12-ஆம் வகுப்பு (Biology அல்லது Botany & Zoology) தேர்ச்சி + 10-ஆம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் + 2 வருட MPHW (Male) / Sanitary Inspector கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். |
| Staff Nurse (UHWC) | DGNM அல்லது B.Sc., Nursing முடித்திருக்க வேண்டும். |
| ULB-UHN | 12-ஆம் வகுப்பு தேர்ச்சி + DPH அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 2 வருட ANM கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். |
| Health Inspector Gr II (MTM) | 12-ஆம் வகுப்பு (Biology அல்லது Botany & Zoology) தேர்ச்சி + 10-ஆம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் + 2 வருட MPHW (Male) / Sanitary Inspector கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். |
| Mid Level Health Provider (MLHP) | DGNM அல்லது B.Sc., Nursing முடித்திருக்க வேண்டும். |
| Data Manager (IDSP) | Computer Science-ல் முதுகலை (P.G.) பட்டப்படிப்புடன் 1 வருட அனுபவம் அல்லது B.E. (IT / Electronics) முடித்திருக்க வேண்டும். |
| Programme – Administrative Assistant | ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு + MS Office இயக்குவதில் திறன் + 1 வருட அலுவலக மேலாண்மை / சுகாதாரத் திட்டம் (NRHM) சார்ந்த பணி அனுபவம் + கணக்குப்பதிவியல் (Accountancy) மற்றும் வரைவுத் திறன் (Drafting skills). |
| Cleaner | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்). |
| Multipurpose Hospital Worker | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்). |
| Dental Technician (DEIC) | Diploma in Dental Technology முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
| Optometrist (DEIC) | Bachelor of Optometry (B.Optom) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். |
| Occupational Therapist (DEIC) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors அல்லது Master’s degree in Occupational Therapy முடித்திருக்க வேண்டும். |
| Sanitary Worker (SNCU) | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்). |
| CEmONC Security Guard | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்). |
Coimbatore DHS Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | உச்ச வயது வரம்பு |
| Medical Officer (UHWC) | விண்ணப்பதாரர்கள் 40 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Health Inspector Gr II (UHWC) | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Staff Nurse (UHWC) | விண்ணப்பதாரர்கள் 50 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| ULB-UHN | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Health Inspector Gr II (MTM) | விண்ணப்பதாரர்கள் 50 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Mid Level Health Provider (MLHP) | விண்ணப்பதாரர்கள் 50 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Data Manager (IDSP) | விண்ணப்பதாரர்கள் 40 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Programme – Administrative Assistant | விண்ணப்பதாரர்கள் 45 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Cleaner | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Multipurpose Hospital Worker | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Dental Technician (DEIC) | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Optometrist (DEIC) | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Occupational Therapist (DEIC) | விண்ணப்பதாரர்கள் 40 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Sanitary Worker (SNCU) | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| CEmONC Security Guard | விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
Coimbatore DHS Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய வரம்பு பின்வருமாறு:
| பதவியின் பெயர் (Post Name) | மாதச் சம்பளம் |
| Medical Officer (UHWC) | ₹63,000/- |
| Health Inspector Gr II (UHWC) | ₹17,500/- |
| Staff Nurse (UHWC) | ₹21,000/- |
| ULB-UHN | ₹17,500/- |
| Health Inspector Gr II (MTM) | ₹17,500/- |
| Mid Level Health Provider (MLHP) | ₹21,000/- |
| Data Manager (IDSP) | ₹25,000/- |
| Programme – Administrative Assistant | ₹20,000/- |
| Cleaner | ₹11,000/- |
| Multipurpose Hospital Worker | ₹11,000/- |
| Dental Technician (DEIC) | ₹17,000/- |
| Optometrist (DEIC) | ₹12,000/- |
| Occupational Therapist (DEIC) | ₹23,000/- |
| Sanitary Worker (SNCU) | ₹11,000/- |
| CEmONC Security Guard | ₹11,000/- |
Tamilnadu DHS Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்க (District Health Society) வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு ஏதுமின்றி விண்ணப்பதாரர்கள் எளிமையான முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முதலில் தகுதி வாரியாகப் பரிசீலனை (Shortlisting) செய்யப்படும். அதன் பின்னர், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டும் நேரடியாக நேர்காணல் (Interview) நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
முக்கியமான தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 22.05.2026
- விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.06.2026
Coimbatore DHS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- படி 1: விண்ணப்பப் படிவத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
- படி 2: விண்ணப்பப் படிவத்தில் உங்களது முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணைத் தெளிவாகக் குறிப்பிட்டு, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
- படி 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களில் சுய சான்றொப்பம் (Self-Attested) செய்து இணைக்க வேண்டும்:
- கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் (Mark Sheets)
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)
- இருப்பிடச் சான்று (Family Card / முகவரிச் சான்று நகல்)
- முன்னுரிமைச் சான்றிதழ் (Priority Certificate – பொருந்தும் பட்சத்தில் மட்டும்)
- படி 4: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேராகவோ அல்லது Speed Post மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Member Secretary / District Health Officer, District Health Society, District Health Office, 219, Race Course Road, Coimbatore – 641018.
| விவரம் | தகவல் |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |


