Saturday, April 19, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு அரசு காவல் துறையில் 1299 SI காலிப்பணியிடங்கள்; ரூ.36,900 சம்பளம் - டிகிரி தேர்ச்சி...

தமிழ்நாடு அரசு காவல் துறையில் 1299 SI காலிப்பணியிடங்கள்; ரூ.36,900 சம்பளம் – டிகிரி தேர்ச்சி போதும்! TNUSRB SI Recruitment 2025

TNUSRB SI Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள 1299 Sub Inspector (SI)/சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
Tamil Nadu Uniformed Services Recruitment Board
காலியிடங்கள்1299
பணிSub Inspector (SI)/சார்பு ஆய்வாளர்கள்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.05.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnusrb.tn.gov.in/

தமிழ்நாடு காவல் துறை SI வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு காவல் துறை SI வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல் துறை SI வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு விண்ணப்பிப்போர் 20 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வுகள் உள்ளன.

அதிகபட்ச வயது தளர்வு விவரங்கள்:

வகைஅதிகபட்ச வயது தளர்வு
BC/BCM/MBC/DNC32 ஆண்டுகள் (32 years)
SC/ST/SC(A)/திருநங்கை (Transgender)35 ஆண்டுகள் (35 years)
விதவை (கைவிடப்பட்டவர்) (Destitute Widow)37 ஆண்டுகள் (37 years)
முன்னாள் ராணுவத்தினர்/மத்திய துணை ராணுவப் படையின் முன்னாள் பணியாளர்கள்/ஆன்லைன் விண்ணப்பம் பெற கடைசி தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஓய்வு பெற உள்ள பணியாளர்கள் 471 ஆண்டுகள் (47 years)
துறை ஒதுக்கீட்டிற்கான துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் (Departmental candidates appearing for departmental quota)47 ஆண்டுகள் (47 years)

தமிழ்நாடு காவல் துறை SI காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு காவல் துறை SI காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பொது விண்ணப்பதாரர்களுக்கு:

  • முதல்நிலை தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத் தேர்வு (Main Exam)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • உடற்கூறு அளத்தல் தேர்வு (Physical Measurement Test)
  • உடற்தகுதி தேர்வு (Endurance Test)
  • உடல்திறன் போட்டி (Physical Efficiency Test)

துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு:

  • முதல்நிலை எழுத்துத் தேர்வு (Preliminary Written Exam)
  • முதன்மைத் தேர்வு (Main Exam)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • உடற்தகுதி தேர்வு (Endurance Test)
  • நேர்முகத் தேர்வு (Interview)

பொதுவான செயல்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக பட்டியல் (Provisional Selection List) வெளியிடப்படும்.அதனைத்தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்

வகைதேர்வு கட்டணம்
General Candidates (பொது விண்ணப்பதாரர்கள்)Rs. 500/-
Departmental Candidates (For both Open & Departmental Quota) (துறை விண்ணப்பதாரர்கள் (திறந்த மற்றும் துறை ஒதுக்கீடு இரண்டிற்கும்))Rs. 1000/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு காவல் துறை SI பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ க்கு சென்று ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. 03.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறையை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

TNUSRB SI குறுகிய அறிவிப்பு PDFClick Here
TNUSRB SI அதிகாரப்பூர்வ
அறிவிப்பு PDF
Click Here
TNUSRB SI ஆன்லைன்
விண்ணப்ப படிவம்
Click Here
TNUSRB அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments