IFFCO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO), 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி பொறியாளர் பயிற்சி (Graduate Engineer Trainee – GET) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ₹65,000/- வரை மிகச்சிறந்த ஊதியம் வழங்கப்படுவதால், இது பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30.04.2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IFFCO Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணி | Graduate Engineer Trainee – GET |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.04.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iffco.in/en/ |
IFFCO Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Graduate Engineer Trainee (GET) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IFFCO Recruitment 2026 கல்வித் தகுதி
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 Graduate Engineer Trainee (GET) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டம் (B.E / B.Tech) பெற்றிருக்க வேண்டும்:
- Chemical / Mechanical / Electrical / Instrumentation & Electronics
- Civil / IT / Computer Science
- Bachelor in Artificial Intelligence
குறிப்பு: படிப்பை முடித்தவர்கள் அல்லது ஆகஸ்ட் 2026-க்குள் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் என்று எதிர்பார்ப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்
IFFCO இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30.04.2026 அன்றைய தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன; அதன்படி, SC / ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
IFFCO Recruitment 2026 சம்பள விவரங்கள்
IFFCO இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் Rs.65,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- கணினி வழி ஆன்லைன் தேர்வு (Computer Based Online Test)
- நேர்காணல் (Personal Interview)
முக்கியத் தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 24.04.2026
- விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2026
IFFCO Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.04.2026 முதல் 30.04.2026 தேதிக்குள் https://www.iffco.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







