PGCIL POWERGRID Non Executive Recruitment 2026

PGCIL அரசு மின்சார துறையில் வேலை – 660 காலியிடங்கள் || ரூ.24,000 சம்பளம்! PGCIL POWERGRID Non Executive Recruitment 2026

PGCIL POWERGRID Non Executive Recruitment 2026: இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL), நாட்டின் மிகப்பெரிய மின் பரிமாற்ற நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Junior Officer Trainee, Diploma Trainee மற்றும் Junior Technician Trainee ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 660 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 21,000 முதல் ரூ. 1,08,000 வரை சிறப்பான ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் 11.05.2026-க்குள் ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வித் தகுதிகள், வயது வரம்புத் தளர்வு, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் படிநிலைகள் குறித்த முழுமையான விவரங்களை நீங்கள் கீழே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Power Grid Corporation of India Limited (PGCIL)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
காலியிடங்கள்660
பணிJunior Officer Trainee, Diploma Trainee மற்றும் Junior Technician Trainee
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி11.05.2026
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.powergrid.in/en/job-opportunities
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2026 ஆனது கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்மொத்த இடங்கள்
Diploma Trainee (Electrical/Civil)465
Diploma Trainee (Civil – DTC)104
Diploma Trainee (Survey – DTS)3
Junior Officer Trainee (HR)30
Junior Officer Trainee (F&A)23
Junior Technician Trainee (Survey)23
மொத்தம்648+

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

பதவியின் பெயர்கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள்
Diploma Trainee (Electrical)3 ஆண்டு கால Regular Diploma (Electrical / Electrical & Electronics / Power Systems / Power Engineering).
Diploma Trainee (Civil)3 ஆண்டு கால Regular Diploma in Civil Engineering.
Diploma Trainee (Survey)3 ஆண்டு கால Regular Diploma in Survey Engineering (அல்லது) Diploma in Civil (Survey ஒரு பாடமாக இருக்க வேண்டும்).
Junior Officer Trainee (HR)3 ஆண்டு கால Regular Degree – BBA / BBM / BBS (அல்லது அதற்கு இணையான படிப்பு).
Junior Officer Trainee (F&A)Inter CA / Inter CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Technician Trainee (Survey)2 ஆண்டு கால Regular ITI (Surveyor) தேர்ச்சி.

குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பு (Minimum Marks):

  • Diploma Trainee (DTE/DTC/DTS):
    • General/OBC(NCL)/EWS: 70% மதிப்பெண்கள் அவசியம்.
    • SC/ST/PwBD: தேர்ச்சி மதிப்பெண் (Pass Marks) போதுமானது.
  • Junior Officer Trainee (HR):
    • General/EWS/OBC(NCL): 60% மதிப்பெண்கள் அவசியம்.
  • Junior Technician Trainee (Survey):
    • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Regular ITI தேர்ச்சி.

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு (Upper Age Relaxation):

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள்:

  • SC/ST வகுப்பினருக்கு – 5 ஆண்டுகள்
  • OBC வகுப்பினருக்கு – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) வகுப்பினருக்கு – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) வகுப்பினருக்கு – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) வகுப்பினருக்கு – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen வகுப்பினருக்கு – அரசு விதிமுறைகள் படி

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2026 பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவி (Post Name)சம்பளம் (Salary)
Diploma Traineeரூ. 24,000 – 1,08,000/-
Junior Officer Traineeரூ. 24,000 – 1,08,000/-
Junior Technician Traineeரூ. 21,000 – 72,000/-

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்துப் பதவிகளுக்கும் முதற்கட்டமாக கணினி வழித் தேர்வு (CBT) நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வுகள் (Skill/Trade Test) நடத்தப்படும்.

1. Diploma Trainee (DTE / DTC / DTS)

  • நிலை 1: எழுத்துத் தேர்வு அல்லது கணினி வழித் தேர்வு (Written Test / CBT).
  • தேர்வு முறை: இதில் இரண்டு பகுதிகள் இருக்கும் (Technical & Aptitude).
  • இறுதித் தேர்வு: CBT தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

2. Junior Officer Trainee (HR / F&A)

இந்த பதவிக்கு இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்:

  • நிலை 1: கணினி வழித் தேர்வு (CBT).
  • நிலை 2: கணினி திறன் தேர்வு (Computer Skill Test).
  • குறிப்பு: Computer Skill Test என்பது ஒரு தகுதித் தேர்வு (Qualifying Nature) மட்டுமே. இறுதிப் பட்டியல் CBT மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

3. Junior Technician Trainee (Survey)

இந்த பதவிக்கு இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்:

  • நிலை 1: கணினி வழித் தேர்வு (CBT).
  • நிலை 2: தொழில்முறைத் திறன் தேர்வு (Trade Test).

குறிப்பு: Trade Test என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் தேர்ச்சி பெறுவது அவசியம், ஆனால் இதன் மதிப்பெண்கள் இறுதிப் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
வகுப்பு (Category)கட்டணம்
ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள்கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்கள்ரூ.200/-
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2026

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 20.04.2026 முதல் 11.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, https://www.powergrid.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
(20.04.2026 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்)
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top