SECL Recruitment 2026: இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான South Eastern Coalfields Limited (SECL), 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, சுரங்கத் துறையில் Mining Sirdar, Assistant Foreman மற்றும் Dy. Surveyor ஆகிய முக்கியப் பதவிகளில் மொத்தம் 1,055 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு முதல், சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதம் ₹47,330 வரை சிறப்பான ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், வரும் 14.05.2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கான விரிவான கல்வித் தகுதிகள், வயது வரம்பு நிபந்தனைகள், தேர்வு முறை மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.
SECL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | South Eastern Coalfields Limited (SECL) (சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்) |
| காலியிடங்கள் | 1055 |
| பணிகள் | Mining Sirdar, Assistant Foreman மற்றும் Dy. Surveyor |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 14.05.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://secl-cil.in/jobs_secl |
SECL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Mining Sirdar (T&S Grade-C) | 577 |
| Assistant Foreman (Electrical – Grade C) | 43 |
| Dy. Surveyor (T&S Grade – C Mining) | 435 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
South Eastern Coalfields Limited Recruitment 2026 கல்வித் தகுதி
மத்திய அரசு South Eastern Coalfields Limited வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| Mining Sirdar (T&S Grade-C) | 10-ஆம் வகுப்பு / Diploma / Degree (Mining Engineering) + Valid Mining Sirdar, Gas Testing & First Aid சான்றிதழ்கள் |
| Assistant Foreman (Electrical – Grade C) | 10-ஆம் வகுப்பு / Diploma / Degree (Mining or Mine Surveying) + Valid Surveyor Certificate (SCC) |
| Dy. Surveyor (T&S Grade – C Mining) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + Electrical Engineering-ல் 3 வருட Diploma அல்லது அதற்கு மேல் |
SECL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
மத்திய அரசு SECL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) பிரிவினருக்கு – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினருக்கு – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen பிரிவினருக்கு – அரசு விதிமுறைகள் படி
SECL Recruitment 2026 சம்பள விவரங்கள்
மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவியின் பெயர் | மாதச் சம்பளம் |
| Mining Sirdar (T&S Grade-C) | ₹47,330.25 |
| Assistant Foreman (Electrical – Grade C) | ₹47,330.25 |
| Dy. Surveyor (T&S Grade – C Mining) | ₹47,330.25 |
SECL Recruitment 2026 தேர்வு செயல்முறை
மத்திய அரசு SECL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 – ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1,180/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2026
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2026
SECL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.04.2026 முதல் 14.05.2026 தேதிக்குள் https://secl-cil.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |







