CSIR Central Road Research Institute Recruitment 2025: மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – Central Road Research Institute) காலியாக உள்ள 209 Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்),Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
CSIR Central Road Research Institute Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | CSIR – மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் CSIR – Central Road Research Institute |
காலியிடங்கள் | 209 |
பணி | Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்), Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 21.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://crridom.gov.in/recruitment |
CSIR CRRI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்) | 177 |
Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்) | 32 |
மொத்தம் | 209 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CSIR Central Road Research Institute Recruitment 2025 கல்வித் தகுதி
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம்த்தில் 10+2/பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், கணினி தட்டச்சு வேகத்தில் தேர்ச்சியும், கணினியைப் பயன்படுத்தும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.19,900 – 63,200/- வழங்கப்படும்.
Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.25,500 – 81,100/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Competitive Written Examination
- Proficiency Test
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, பெண்கள்,Ex-s, PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
- கட்டண முறை: ஆன்லைன்
CSIR Central Road Research Institute Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.03.2025 முதல் 21.04.2025 மாலை 05.00 மணிக்குள் https://crridom.gov.in/ இணையதளத்தில் சென்று Apply Online பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து அதன்பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |