RRB Technician Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Technician (டெக்னீசியன்) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB Technician ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 6238 Technician (டெக்னீசியன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
ரயில்வேயில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ஐடிஐ முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வேயில் உள்ள டெக்னீஷியன் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 28 முதல் இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கப்படுகிறது.
RRB Technician Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்கள் | 6238 |
பணிகள் | Technician (டெக்னீசியன்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbapply.gov.in/ |
RRB Technician Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
Technician (டெக்னீசியன்) – (Signal) | 183 |
Technician (டெக்னீசியன்) | 6055 |
மொத்தம் | 6238 |
மண்டல வாரியான காலியிட விவரங்கள்:
RRB Technician Recruitment 2025 Vacancy Details | |
RRB/Zone Name | Total |
Chittaranjan Locomotive Works (CLW) | 222 |
Central Railway (CR) | 305 |
East Coast Railway(ECOR) | 79 |
East Central Railway(ECR) | 31 |
Eastern Railway (ER) | 1,119 |
Integral Coach Factory (ICF) | 404 |
North Central Railway (NCR) | 241 |
North Eastern Railway (NER) | 68 |
Northeast Frontier Railway (NFR) | 317 |
Northern Railway (NR) | 478 |
North Western Railway (NWR) | 188 |
Patiala Locomotive Works (PLW) | 218 |
Rail Coach Factory (RCF) | 47 |
Rail Wheel Factory (RWF) | 36 |
South Central Railway (SCR) | 89 |
South East Central Railway (SECR) | 57 |
South Eastern Railway (SER) | 180 |
Southern Railway (SR) | 1,215 |
South Western Railway (SWR) | 106 |
West Central Railway(WCR) | 126 |
Western Railway(WR) | 849 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRB Technician Recruitment 2025 கல்வித் தகுதி
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Technician (டெக்னீசியன்) Grade – I (Signal) கல்வித் தகுதி
A) இயற்பியல் (Physics) / எலெக்ட்ரானிக்ஸ் (Electronics) / கம்ப்யூட்டர் சயின்ஸ் (CS) / தகவல் தொழில்நுட்பம் (IT) / இன்ஸ்ட்ரூமென்டேஷன் (Instrumentation) ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை அறிவியல் பட்டம் (Bachelor of Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
B) இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இன்ஜினியரிங் பட்டம் (Graduate in Engineering) பெற்றிருக்க வேண்டும்.
Technician (டெக்னீசியன்) Grade – I கல்வித் தகுதி
- மெட்ரிகுலேஷன் / SSLC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய பிரிவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் இருந்து ITI முடித்திருக்க வேண்டும். அல்லது
- மெட்ரிகுலேஷன் / SSLC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய பிரிவுகளில் முழுமையான அப்ரண்டிஸ்ஷிப் படிப்பை (Course Completed Act Apprenticeship) முடித்திருக்க வேண்டும்.
RRB Technician Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
Technician (டெக்னீசியன்) Grade – I (Signal) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Technician (டெக்னீசியன்) Grade – I (Signal) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
RRB Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | சம்பளம் |
Technician (டெக்னீசியன்) Grade – I (Signal) | ரூ.29,200/- |
Technician (டெக்னீசியன்) Grade – I | ரூ.19,900/- |
Railway Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவ பரிசோதனை (Medical Examination)
RRB Technician Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண்கள் (Female), திருநங்கைகள் (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (Economically Backward Class – EBC) ஆகிய பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, முழுத் தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
- ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
- கட்டண முறை: ஆன்லைன்
RRB Technician Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
RRB இரயில்வே துறையில் Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 28.06.2025 முதல் 28.07.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 28.06.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 28.07.2025
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து, புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதன் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.