IRCTC Recruitment 2025: ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) காலியாக உள்ள 25 அப்ரண்டிஸ் (Apprentices) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IRCTC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) (Indian Railway Catering and Tourism Corporation) |
காலியிடங்கள் | 25 |
பணிகள் | அப்ரண்டிஸ் (Apprentices) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 07.04.2025 |
பணியிடம் | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | irctc.co.in |
IRCTC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அப்ரண்டிஸ் (Apprentices) – 25 காலிப்பணியிடங்கள்
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்:
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Computer Operator and Programming Assistant (COPA) | 05 |
Executive – Procurement | 10 |
HR Executive – Finance Payroll & Employee Data Management | 02 |
Executive – HR | 01 |
CSR Executive | 01 |
Marketing Associate Training | 04 |
IT Support Executive | 02 |
Apprentice பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
பணியின் பெயர் | தகுதி |
Computer Operator and Programming Assistant (COPA) | 10th, ITI |
Executive – Procurement | Degree in Commerce / CA Inter / Supply Chain or Similar |
HR Executive – Finance Payroll & Employee Data Management | Any Degree |
Executive – HR | Any Degree |
CSR Executive | Any Degree |
Marketing Associate Training | Any Degree |
IT Support Executive | Any Degree |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்புகள் |
Computer Operator and Programming Assistant (COPA) | 15 வயது முதல் 25 வயது வரை |
Executive – Procurement | 15 வயது முதல் 25 வயது வரை |
HR Executive – Finance Payroll & Employee Data Management | 15 வயது முதல் 25 வயது வரை |
Executive – HR | 15 வயது முதல் 25 வயது வரை |
CSR Executive | 15 வயது முதல் 25 வயது வரை |
Marketing Associate Training | 15 வயது முதல் 25 வயது வரை |
IT Support Executive | 15 வயது முதல் 25 வயது வரை |
ரயில்வே IRCTC விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், முன்னாள் ராணுவ வீரர் – 10 வருடங்கள் வரையும், PwBD பிரிவினருக்கு – 10 வருடங்கள் வரையும் வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரங்கள்
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Apprentice பயிற்சி காலத்தில் பின்வரும் விதிகளின் படி உதவித்தொகை வழங்கப்படும்:
வகை | மாத உதவித்தொகை |
பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் (5-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை) | ரூ. 5000/- |
பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் (10-ஆம் வகுப்பு) | ரூ. 6000/- |
பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் (12-ஆம் வகுப்பு) | ரூ. 7000/- |
Diploma தேர்ச்சி பெற்றவர்கள் | ரூ. 8000/- |
Degree தேர்ச்சி பெற்றவர்கள் | ரூ. 9000/- |
தேர்வு செயல்முறை
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் Apprentices பணியிடங்களுக்கு தகுதிப் பட்டியல், ஆவண சரிபார்ப்பு, மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IRCTC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.03.2025 முதல் 07.04.2025 தேதிக்குள் https://www.apprenticeshipindia.gov.in/ இணையத்தில் சென்று Student ஆக Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |