Thursday, February 6, 2025
HomeUncategorizedதமிழ்நாட்டில் IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - 200 காலியிடங்கள்; தேர்வு கிடையாது ||...

தமிழ்நாட்டில் IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை – 200 காலியிடங்கள்; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் IOCL SR Recruitment 2025

IOCL SR Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது காலியாக உள்ள 200 Trade Apprentice, Technician Apprentice, Graduate Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும்

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
Indian Oil Corporation Limited – Southern Region
காலியிடங்கள்200 Apprentice
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி16.02.2025
பணியிடம்தமிழ்நாடு & புதுச்சேரி, கர்நாடகா,
கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://iocl.com/

இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடம்
Trade Apprentice130
Technician Apprentice65
Graduate Apprentice37
மொத்தம்200

இதில் மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Trade Apprentice: பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Technician Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..
  3. Graduate Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு Apprentice விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

இந்த பணிக்கு தேர்வுகள் கிடையாது..விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, ITI, டிகிரி, டிப்ளமோ படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் Shortlisting (தகுதி பட்டியல்) செய்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.01.2025 முதல் 16.02.2025 தேதிக்குள் https://iocl.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Trade Apprentice பணிக்கு https://www.apprenticeshipindia.gov.in/candidate-login இணையதளத்தில் முதலில் Register பட்டனை கிளிக் செய்து Candidate ஆக Register செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Technician Apprentice மற்றும் Graduate Apprentice பணிக்கு https://nats.education.gov.in/student_type.php இணையதளத்தில் சென்று முதலில் Student பட்டனை கிளிக் செய்து Student ஆக Register செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Trade Apprentice விண்ணப்ப படிவம்Click Here
Technician Apprentice விண்ணப்ப படிவம்Click Here
Graduate Apprentice விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments