NPCIL Recruitment 2025: இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL) காலியாக உள்ள 391 Assistant, Scientific Assistant, Stipendiary Trainee, Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NPCIL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL) |
காலியிடங்கள் | 391 |
பணி | Assistant, Scientific Assistant, Stipendiary Trainee, Technician |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://npcilcareers.co.in/ |
NPCIL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Scientific Assistant – B | 45 |
Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA) | 82 |
Stipendiary Trainee/ Technician (ST/Technician) | 226 |
Assistant Grade – 1 (HR) | 22 |
Assistant Grade – 1 (F&A) | 04 |
Assistant Grade – 1 (C&MM) | 10 |
Nurse – A | 01 |
Technician/C (X-Ray Technician) | 01 |
மொத்தம் | 391 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NPCIL Recruitment 2025 கல்வித் தகுதி
NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, ஏதேனும் பட்டம், Diploma in Nursing & Midwifery or B.Sc. Nursing போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வித் தகுதிகள் மாறுபடும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு விவரங்கள் பின்வருமாறு: SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும். PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 வருடங்களும், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 வருடங்களும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
NPCIL Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Scientific Assistant – B | Rs.54,162/- |
Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA) | Rs.54,162/- |
Stipendiary Trainee/ Technician (ST/Technician) | Rs.33,201/- |
Assistant Grade – 1 (HR) | Rs.39,015/- |
Assistant Grade – 1 (F&A) | Rs.39,015/- |
Assistant Grade – 1 (C&MM) | Rs.39,015/- |
Nurse – A | Rs.68,697/- |
Technician/C (X-Ray Technician) | Rs.39,015/- |
NPCIL Recruitment 2025 தேர்வு செயல்முறை
NPCIL இந்திய அணுசக்தி கழகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- ஆன்லைன் தேர்வு
- தனிப்பட்ட நேர்காணல் / திறன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்:
NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்:
1. Scientific Assistant – B, Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA), Nurse – A ஆகிய பதவிகளுக்கு:
- SC/ST/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவ வீரர்கள்: கட்டணம் இல்லை.
- பிற விண்ணப்பதாரர்கள்: ரூ. 150/-
2. Assistant Grade – 1 (HR, F&A, C&MM), Technician/C (X-Ray Technician) ஆகிய பதவிகளுக்கு:
- SC/ST/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவ வீரர்கள்: கட்டணம் இல்லை.
- பிற விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
NPCIL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2025 முதல் 01.04.2025 தேதிக்குள் https://npcilcareers.co.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |