Indian Navy Group C Recruitment 2025: இந்திய கடற்படை ஆனது குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Navy Group C Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியக் கடற்படை |
காலியிடங்கள் | 327 |
பணிகள் | குரூப் சி |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.joinindiannavy.gov.in |
Indian Navy Group C Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Group C – 327 காலியிடங்கள்
பதவி வாரியான காலியிட விவரங்கள்:
பதவி | காலியிடம் |
Syrang of Lascars | 57 |
Lascar-l | 192 |
Fireman (Boat Crew) | 73 |
Topass | 05 |
மொத்தம் | 327 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Navy Recruitment 2025 கல்வித் தகுதி
Topass:
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
Syrang of Lascars:
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உள்நாட்டு கப்பல் அல்லது வணிக கப்பல் இன் கீழ் வழங்கப்பட்ட Syrang சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- கப்பலுக்கு Syrang-இன்-சார்ஜ் ஆக இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Lascar-l:
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட கப்பலில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Fireman (Boat Crew):
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
- முன்-கடல் பயிற்சி படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவி | வயது வரம்பு |
Syrang of Lascars | 18 முதல் 25 வரை |
Lascar-l | 18 முதல் 25 வரை |
Fireman (Boat Crew) | 18 முதல் 25 வரை |
Topass | 18 முதல் 25 வரை |
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசு கொள்கையின் படி.
சம்பள விவரங்கள்
இந்திய கடற்படை குரூப் சி 2025 – சம்பள விவரங்கள்:
- Syrang of Lascars: நிலை – 4 ரூ. 25500 – 81100/-
- Lascar-l: நிலை – 1 ரூ. 18000 – 56900/-
- Fireman (Boat Crew): நிலை – 1 ரூ. 18000 – 56900/-
- Topass: நிலை – 1 ரூ. 18000 – 56900/-
தேர்வு செயல்முறை
இந்தியக் கடற்படை குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Navy Group C Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியக் கடற்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2025 முதல் 01.04.2025 தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.03.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 01.04.2025