Indian Army Women Military Police Recruitment 2025: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய இராணுவம் பெண் விண்ணப்பதாரர்களுக்கான இராணுவ அக்னிவீர் 2025 ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த அக்னிவீர் (GD) பதவிக்கு திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.04.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Army Women Military Police Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய ராணுவம் (Indian Army) |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | அக்னிவீர் (GD) (பெண்கள் ராணுவ காவலர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 10.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.joinindianarmy.nic.in/ |
Indian Army Women Military Police Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய ராணுவம் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அக்னிவீர் (GD) (பெண்கள் ராணுவ காவலர்) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இந்திய ராணுவம் அக்னிவீர் (GD) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் விண்ணப்பதாரர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஒட்டுமொத்தமாக 45 சதவீத மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவி | வயது வரம்பு |
அக்னிவீர் (பெண்கள் ராணுவ காவலர்) | 17½ – 21 வயது |
குறிப்பு: 01 அக்டோபர் 2004 முதல் 01 ஏப்ரல் 2008 வரை (இரண்டு நாட்களும் உட்பட) பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
குறிப்பு:– பாதுகாப்புப் படையினரின் விதவைகள், பணியில் இருக்கும்போது இறந்தவர்களுக்கு, பயிற்சியில் சேரும் தேதியின்படி, அதிகபட்ச வயது வரம்பு 30 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.- விண்ணப்பதாரர்களுக்கான வயதுத் தகுதியை நிர்ணயிப்பதற்கான நடைமுறை தேதியாக 01 அக்டோபர் 2025 எடுத்துக்கொள்ளப்படும்.
சம்பள விவரங்கள்
தேர்வு செயல்முறை
இந்திய ராணுவம் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
கட்டம் – I:
- ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE)
- அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) பதவிக்கு தட்டச்சுத் தேர்வு
கட்டம் – II:
- ஆவண சரிபார்ப்பு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
- உடல் தகுதி தேர்வு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
- உடல் அளவீட்டு தேர்வு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
- தகவமைவுத் தேர்வு (Adaptability Test)
- மருத்துவ பரிசோதனை
தேர்வு கட்டணம்: ரூ.250/-
Indian Army Women Military Police Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய ராணுவம் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2025 முதல் 10.04.2025 தேதிக்குள் http://joinindianarmy.nic.in/ இணையத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
பெண் ராணுவ அக்னிவீர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான joinindianarmy.nic.in ஐப் பார்வையிடவும்.
- வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில், ‘Agnipath’ தாவலின் கீழ் உள்ள ‘Register அல்லது Apply Online’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பிறந்த தேதி, ஆதார் அட்டை, பெயர் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
- விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பி, கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புகளுக்காக படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவது மிகவும் நல்லது.