Cochin Shipyard Recruitment 2025: மத்திய அரசின் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறையின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் தற்போது காலியாக உள்ள 24 Fireman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Cochin Shipyard Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) |
காலியிடங்கள் | 24 Posts |
பணிகள் | Fireman |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.05.2025 |
பணியிடம் | Kochi, Kerala |
அதிகாரப்பூர்வ இணையதளம் | cochinshipyard.in |
Cochin Shipyard Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Fireman | 24 |
மொத்த காலியிடங்கள் | 24 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cochin Shipyard Recruitment 2025 கல்வித் தகுதி
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- தீயணைப்புப் பயிற்சியில் குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- தீயணைப்புப் பணியில் குறைந்தபட்சம் மூன்று வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Cochin Shipyard Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் Fireman பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 23.05.2025 தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (24.05.1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்).
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
தீயணைப்பு வீரர் (Fireman):
- மூன்றாம் வருடம்: மாதம் ₹ 23,400 + கூடுதல் நேரத்திற்கான இழப்பீடு ₹ 5,850
- முதல் வருடம்: மாதம் ₹ 22,300 + கூடுதல் நேரத்திற்கான இழப்பீடு ₹ 5,530
தேர்வு செயல்முறை
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் Fireman பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Practical Test (70 marks)
- Physical Test (30 marks)
விண்ணப்பக் கட்டணம்
- எஸ்.சி / எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- Gen/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
Cochin Shipyard Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.05.2025 முதல் 23.05.2025 தேதிக்குள் https://cochinshipyard.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.05.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:23.05.2025