Indian Overseas Bank LBO Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 400 Local Bank Officer (உள்ளூர் வங்கி அதிகாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 31.05.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Overseas Bank LBO Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
காலியிடங்கள் | 400 |
பணிகள் | Local Bank Officer (உள்ளூர் வங்கி அதிகாரி) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.05.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iob.in/Careers |
Indian Overseas Bank LBO Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Local Bank Officer (உள்ளூர் வங்கி அதிகாரி) – 400 காலியிடங்கள்
மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Overseas Bank LBO Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Local Bank Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Graduation Degree) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஆன்லைனில் பதிவு செய்யும் நாளன்று பட்டப்படிப்பு முடித்ததற்கான சரியான மதிப்பெண் பட்டியல் / பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தை குறிப்பிட வேண்டும்.
Indian Overseas Bank LBO Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Local Bank Officer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 01/05/2025 அன்று தேதியின் படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
Indian Overseas Bank Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Local Bank Officer பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- முதல் ரூ.85920 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
Indian Overseas Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Local Bank Officer பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Online Test (ஆன்லைன் தேர்வு)
- Local Language Test (உள்ளூர் மொழித் தேர்வு)
- Interview (நேர்காணல்)
Indian Overseas Bank Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/ விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.175/-
- Gen/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Overseas Bank LBO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.05.2025 முதல் 31.05.2025 தேதிக்குள் www.iob.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.05.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.05.2025