TNPSC Group 5A Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5A தேர்வு மூலம் காலியாக உள்ள 32 உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) மற்றும் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNPSC Group 5A Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
| காலியிடங்கள் | 32 |
| பதவியின் பெயர் | உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) மற்றும் உதவியாளர் (Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 05.11.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnpsc.gov.in/examdashboard/ |
TNPSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post Name) | காலியிடங்கள் (Vacancies) |
| Assistant Section Officer – Secretariat | 22 |
| Assistant Section Officer – Finance | 03 |
| Assistant – Secretariat | 05 |
| Assistant – Finance | 02 |
| மொத்தம் | 32 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Group 5A Recruitment 2025 கல்வித் தகுதி
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவி (Post Name) | கல்வி தகுதி மற்றும் அனுபவம் |
| Assistant Section Officer – Secretariat | (i) இளங்கலை பட்டம் (Bachelor’s degree) (ii) இளநிலை உதவியாளர் (Junior Assistant) அல்லது உதவியாளர் (Assistant) பதவியில் அல்லது இரண்டும் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் வரைவு அனுபவம் (Drafting experience) இருக்க வேண்டும். |
| Assistant Section Officer – Finance | (i) வணிகவியல் (Commerce) அல்லது பொருளாதாரம் (Economics) அல்லது புள்ளியியல் (Statistics)-ல் இளங்கலை பட்டம். (ii) தமிழ்நாடு அமைச்சுப் பணி (Tamil Nadu Ministerial Service) அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் (Tamil Nadu Judicial Ministerial Service) இளநிலை உதவியாளர் பணியும் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் உதவியாளர் பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும். |
| Assistant – Secretariat | (i) இளங்கலை பட்டம். (ii) இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பிரிவில் அல்லது இரண்டும் சேர்த்து குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும். |
| Assistant – Finance | (i) வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல்-ல் இளங்கலை பட்டம். (ii) தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பிரிவில் அல்லது இரண்டும் சேர்த்து குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும். |
TNPSC Group 5A Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
| பதவி (Post Name) | சம்பளம் (Salary Scale – Per Month) |
| Assistant Section Officer – Secretariat | Rs. 36,400 – 1,15,700/- |
| Assistant Section Officer – Finance | Rs. 36,400 – 1,15,700/- |
| Assistant – Secretariat | Rs. 20,000 – 63,600/- |
| Assistant – Finance | Rs. 20,000 – 63,600/- |
வயது வரம்பு விவரங்கள்

TNPSC Recruitment 2025 தேர்வு செயல்முறை
TNPSC குரூப் 5A பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
Written Exam (எழுத்துத் தேர்வு):
- தாள் I (Paper I): பொதுத் தமிழ் (General Tamil)
- தாள் II (Paper II): பொது ஆங்கிலம் (General English)
Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
TNPSC Group 5A Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
| கட்டணம் (Fee Type) | தொகை (Amount) |
| ஒரு முறை பதிவுக் கட்டணம் (One Time Registration Fee) | ரூ. 150/- |
| தேர்வுக் கட்டணம் (Examination Fee) | ரூ. 100/- |
கட்டணச் சலுகை (Fee Concession / Fee Exemption)
| பிரிவு (Category) | சலுகை (Concession) |
| முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) | இரண்டு முறை இலவச வாய்ப்புகள் (Two Free Chances) |
| BC Muslim (BCM), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் (MBC / DC) | மூன்று முறை இலவச வாய்ப்புகள் (Three Free Chances) |
| மாற்றுத் திறனாளிகள் (Persons with Benchmark Disability), பட்டியல் சமூகத்தினர் (SC), பட்டியல் சமூகத்தினர் (அருந்ததியினர்) (SC(A)), பட்டியல் பழங்குடியினர் (ST), ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow) | முழு விலக்கு (Full exemption) |
TNPSC Group 5A Recruitment 2025 முக்கிய தேதிகள்:
| விவரம் (Detail) | தேதி / நேரம் (Date / Time) |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (Start Date to Apply) | 07.10.2025 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date to Apply) | 05.11.2025 |
| தேர்வு நடைபெறும் தேதி (Date of Examination) | |
| தாள் I (Paper I) | 21.12.2025 (காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை) |
| தாள் II (Paper II) | 21.12.2025 (மாலை 02.30 மணி முதல் 05.30 மணி வரை) |
TNPSC Group 5A Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.10.2025 முதல் 05.11.2025 தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







