TN GTE Exams 2025 : தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர், 16.12.2024 முதல் www.tndtegteonline.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான விவரங்கள், துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dte.tn.gov.in-ல் வழங்கப்பட்டுள்ளன.
TN Government Technical Exam 2025: சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் அக்கவுண்டன்சி தேர்வு 2025
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DTE) மூலம் வருடத்திற்கு இரண்டு முறை, பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணக்கியல் தேர்வுகளை நடத்துகிறது. அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான சுருக்கெழுத்து, கணக்கியல், மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வின் முடிவுகள் 06.11.2024 அன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் மொத்தம் 2,01,653 பேர் கலந்து கொண்டனர், இதில் 1,31,205 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழக அரசு துறைகளில் பணி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குரூப் 4 தேர்வில் நிரப்பப்படும் பதவிகளுக்கு இந்த திறன்கள் மிக அவசியமானவை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசு வணிகவியல் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தேர்வுக்குத் தேவையான குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், தேர்வில் செல்ல முன் குறைந்தது 3 மாத கால பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
typist exam 2025 முக்கியமான தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள் | 16 டிசம்பர் 2024 முதல் 17 ஜனவரி 2025 வரை |
இணைய விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாட்கள் | 19 ஜனவரி 2025 முதல் 21 ஜனவரி 2025 வரை |
வணிகவியல் தேர்வுக்கான தேர்வு கட்டண விவரங்கள்:
- விண்ணப்ப கட்டணம் : ரூபாய் 30 /- (அனைத்து பாடங்களும் பதிவு செய்ய )
- தேர்வு கட்டணம் :
- இளநிலை – ரூ.100 /-
- இடைநிலை -ரூ.120/-
- முதுநிலை -ரூ.130/-
- உயர்வேகம் -ரூ.200 /-
TN GTE Exams 2025 முக்கியமான இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: | அறிவிப்பு PDF |
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு: | விண்ணப்பப் படிவம் |
இத்தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். அதே போன்று தேர்விற்கான முடிவுகளும் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.