TN Govt OMCL Germany Nursing Jobs: தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வெளிநாடுகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. அந்த வகையில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
OMCL – நம்பகமான வேலைவாய்ப்பு சேவை
OMCL எனப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர்களுக்கு நம்பகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இதன் முக்கிய நோக்கம். போலி முகவர்களை நம்பி ஏமாறாமல், பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்ல இந்த அமைப்பு உதவுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பயன்பெறுகின்றனர்
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் OMCL மூலம் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள தகுதியான பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, பயண ஏற்பாடுகள் மற்றும் தேவையான பயிற்சிகளை OMCL வழங்குகிறது.
ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வாய்ப்பு
தற்போது, ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு
மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும்
பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து
மாத சம்பளமாக சுமார் 2 இலட்சம் வழங்கப்படும்.
தகுதிகள்:
- செவிலியர் படிப்பு (டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் அவசியம்.
- 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
சலுகைகள்:
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு B1, B2 நிலையில் இலவச ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படும்.
- மாத சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியுள்ளவர்கள் தங்களது சுய விவரங்கள், கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் நகல் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
மேலும் விவரங்களுக்கு:
- தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://omcmanpower.tn.gov.in/ ஐ பார்வையிடவும்.
- அல்லது 044-22505886 / 6379179200 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழக அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஜெர்மனி செவிலியர் வேலை,OMCL வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு வேலை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு, செவிலியர் வேலை வாய்ப்பு, ஜெர்மனி வேலைவாய்ப்பு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு