TN Govt Medical Hospital Recruitment 2025: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 02 ஓட்டுநர் (Driver) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே காணலாம்:
TN Govt Medical Hospital Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை |
காலியிடங்கள் | 02 |
பணிகள் | ஓட்டுநர் (Driver) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.05.2025 |
பணியிடம் | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://krishnagiri.nic.in/ |
TN Govt Medical Hospital Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஓட்டுநர் (Driver) பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
மொத்த காலிப்பணியிடங்கள்: 02
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License) பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 வருட முன்அனுபவம் இந்தத் துறையில் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- பொதுப்பிரிவினர்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- பட்டியல் இனத்தவர்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓட்டுநர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இது அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதமாகும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
TN Govt Medical Hospital Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர் (Driver) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பப் படிவம்: உங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்யவும். விண்ணப்பப் படிவத்தில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி, முன் அனுபவம் மற்றும் இதர தேவையான தகவல்களை தெளிவாக குறிப்பிடவும்.
தேவையான ஆவணங்கள்: விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு (Self-Attested) இணைக்க வேண்டும்:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
- கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License)
- முன் அனுபவச் சான்றிதழ் (குறைந்தபட்சம் 2 வருடங்கள்)
- சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
- ஆதார் அட்டை நகல்
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும், தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
கடைசி தேதி: விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி 30.05.2025, மாலை 5:00 மணி ஆகும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,அரசு மருத்துவக் கல்லூரி,கிருஷ்ணகிரி மாவட்டம் – 635115.
(The Principal,Government Medical College,Krishnagiri District – 635115.)
எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு:
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
- மின்னஞ்சல் முகவரி (E-Mail ID) : [email protected].
- விண்ணப்பத்துடன் அனைத்து கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் முன்அனுபவ சான்று, ஆதார் அட்டை நகல்களுடன் அனுவலப்ப வேண்டும்.
- ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.