South Indian Bank Recruitment 2025: சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் (South Indian Bank Limited) இந்தியாவில் முன்னணி திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் ஒன்று. தற்போது, சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு ஜூனியர் அதிகாரி / வணிக மேம்பாட்டு அதிகாரி (Junior Officer / Business Promotion Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.05.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
South Indian Bank Recruitment 2025
Description | Details |
நிறுவனம் | South Indian Bank |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | Junior Officer / Business Promotion Officer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 26.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruit.southindianbank.com/ |
South Indian Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ஜூனியர் அதிகாரி/ வணிக மேம்பாட்டு அதிகாரி(Junior Officer / Business Promotion Officer) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் ஜூனியர் அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பள விவரங்கள்
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் ஜூனியர் அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ₹7.44 லட்சம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இதில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊதியம் ஆகியவை அடங்கும். மேலும், வங்கியின் விதிமுறைகளின்படி பயணப்படி, தங்குமிடம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும். குழு மருத்துவக் காப்பீடு, குழு விபத்துக் காப்பீடு மற்றும் குழு ஆயுள் காப்பீடு போன்ற காப்பீட்டு வசதிகளும் உண்டு (ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஊழியரால் செலுத்தப்பட வேண்டும்).
தேர்வு செயல்முறை
சவுத் இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200/-
- General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
South Indian Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.05.2025 முதல் 26.05.2025 தேதிக்குள் www.southindianbank.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |