Tiruppur GMCH Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 03 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் டயாலிசிஸ் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.02.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tiruppur GMCH Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை |
பணிகள் | டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் |
நேர்காணல் தேதி | 26.02.2025 |
பணியிடம் | திருப்பூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruppur.nic.in/ |
Tiruppur GMCH Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/Data Entry Operator- 02 காலியிடங்கள்
- டயாலிசிஸ் டெக்னீஷியன்/Dialysis Technician – 01 காலியிடம்
கல்வித் தகுதி
திருப்பூர் அரசு மருத்துவமனை டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.Sc Computer Science) அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலை (Bachelor of Computer Application) அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் டிப்ளமோவுடன் ஏதேனும் பட்டம் (Any degree with Diploma in Computer Application) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
திருப்பூர் அரசு மருத்துவமனை டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Diploma in Dialysis Technician தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு விவரங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
திருப்பூர் அரசு மருத்துவமனை டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் வின்னப்பதற்களுகு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,500/- வழங்கப்படும். டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு தேர்வாகும் வின்னப்பதற்களுகு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
திருப்பூர் அரசு மருத்துவமனை டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Tiruppur GMCH Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பப் படிவங்களை https://tiruppur.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பப் படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருப்பூர் அலுவலகத்தில் 26.02.2025 அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10th, 12th, Degree Certificate with Mark sheets, அனுபவச் சான்று மற்றும் சம்பந்தப்பட்ட பதவிக்கு தேவையான, அரசாணையில் குறிப்பிட்டுள்ள சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
நேர்காணல் நடைபெறும் முகவரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருப்பூர், வெள்ளியங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர்-641604.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |