NTPC Recruitment 2025: மத்திய அரசின் தேசிய அனல் மின் கழக நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள 400 உதவி எக்ஸிகியூட்டிவ் (Assistant Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)
என்டிபிசி லிமிடெட் (NTPC ) என்பது முன்பு நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்பட்டது , இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் .
NTPC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) National Thermal Power Corporation Limited (NTPC) |
காலியிடங்கள் | 400 |
பணி | உதவி எக்ஸிகியூட்டிவ்/ (Assistant Executive) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.03.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://careers.ntpc.co.in/ |
NTPC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவி எக்ஸிகியூட்டிவ் (Assistant Executive) – 400 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
NTPC தேசிய அனல் மின் கழகம் உதவி எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பி.இ/பி.டெக் படிப்பில் Mechanical/ Electrical துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
உதவி எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு (Age Relaxation)
பிரிவு (Category) | வயது தளர்வு (Age Relaxation) |
SC/ST | 5 ஆண்டுகள் (5 Years) |
OBC | 3 ஆண்டுகள் (3 Years) |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் (10 Years) |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் (15 Years) |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் (13 Years) |
சம்பள விவரங்கள்
NTPC தேசிய அனல் மின் கழகம் உதவி எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.55,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
NTPC தேசிய அனல் மின் கழகம் உதவி எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ஆன்லைன் அடிப்படையிலான தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- Female/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- கட்டண முறை: ஆன்லைன்
NTPC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://careers.ntpc.co.in/ இணையதளத்தில் 15.02.2025 முதல் 01.03.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |