Thursday, March 20, 2025
Home12th Pass Govt Jobs8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழக அரசு நகர்புற நலவாழ்வு மையத்தில் வேலை; ரூ.8,500 சம்பளம்...

8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழக அரசு நகர்புற நலவாழ்வு மையத்தில் வேலை; ரூ.8,500 சம்பளம் – தேர்வு கிடையாது! Tiruppur District Health Society Recruitment 2025

Tiruppur District Health Society Recruitment 2025: தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்கீழ், திருப்பூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள 48 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
நகர்ப்புற நலவாழ்வு மையம்
காலியிடங்கள்48
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி24.03.2025
பணியிடம்திருப்பூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruppur.nic.in/

தமிழ்நாடு அரசு நகர்ப்புற நலவாழ்வு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
மருத்துவ அலுவலர் (Medical Officer)12
செவிலியர் (Staff Nurse)12
பல்துறை சுகாதாரப் பணியாளர்
(Multi Purpose Health Worker / Health Inspector – Grade II)
12
மருத்துவமனை பணியாளர் / ஆதரவு ஊழியர்
(Hospital Worker / Support Staff)
12
மொத்தம்48
பணியின் பெயர்கல்வித் தகுதி
மருத்துவ அலுவலர் (Medical Officer)MBBS
செவிலியர் (Staff Nurse)பொது செவிலியர் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (Diploma in General Nursing and Midwifery) அல்லது B.Sc., நர்சிங்
பல்துறை சுகாதாரப் பணியாளர் (Multi Purpose Health Worker / Health Inspector – Grade II)உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. SSLC அளவில் தமிழ் மொழி ஒரு பாடமாக தேர்ச்சி. பல்துறை சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவமனை பணியாளர் / ஆதரவு ஊழியர் (Hospital Worker / Support Staff)எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்வயது வரம்பு
மருத்துவ அலுவலர் (Medical Officer)18 வயது முதல் 40 வயது வரை
செவிலியர் (Staff Nurse)18 வயது முதல் 50 வயது வரை
பல்துறை சுகாதாரப் பணியாளர்
(Multi Purpose Health Worker /
Health Inspector – Grade II)
18 வயது முதல் 35 வயது வரை
மருத்துவமனை பணியாளர் / ஆதரவு ஊழியர்
(Hospital Worker / Support Staff)
18 வயது முதல் 45 வயது வரை
பணியின் பெயர்சம்பளம் (மாதம்)
மருத்துவ அலுவலர் (Medical Officer)ரூ. 60,000/-
செவிலியர் (Staff Nurse)ரூ. 18,000/-
பல்துறை சுகாதாரப் பணியாளர்
(Multi Purpose Health Worker /
Health Inspector – Grade II)
ரூ. 14,000/-
மருத்துவமனை பணியாளர் /
ஆதரவு ஊழியர் (Hospital Worker / Support Staff)
ரூ. 8,500/-

தமிழ்நாடு அரசு நகர்ப்புற நலவாழ்வு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு நகர்ப்புற நலவாழ்வு மையம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ -ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் ஒரு உறையில் வைத்து, நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலச்சங்கம் (District Health Society), 147, பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641 602 என்ற முகவரிக்கு தபால் மூலம் 24.03.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும். மேலும், சந்தேகங்களுக்கு 0421 2478503 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments