Tamilnadu Post Office Recruitment 2025: இந்திய அஞ்சல் துறை 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அஞ்சல் அலுவலங்களில் காலியாக உள்ள 2292 GDS Branch Post Master (கிளை போஸ்ட் மாஸ்டர்), Assistant Branch Post Master(உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்), Dak Sevaks பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tamilnadu Post Office Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய அஞ்சல் துறை தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் |
காலியிடங்கள் | 2292 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 03.03.2025 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indiapostgdsonline.gov.in/ |
TN Post Office Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Branch Post Master (கிளை போஸ்ட் மாஸ்டர்), Assistant Branch Post Master(உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்), Dak Sevaks – 2292 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Post Office Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக அல்லது கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000/- முதல் ரூ.29,380/- வரை சம்பளம் வழங்கப்படும். உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000/- முதல் ரூ.24,470/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்..மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD/Female Candidates/Transwomen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
Tamilnadu Post Office Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.02.2025 முதல் 03.03.2025 தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
மாநில வாரியான காலியிட விவரங்கள்: | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.02.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 03.03.2025