RRB ALP Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Assistant Loco Pilot (ALP) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB ALP ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 9970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்வே துறையில் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் பணி, எண்ணற்ற இளைஞர்களின் கனவுப் பணியாக விளங்குகிறது. இந்த முக்கிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி லோகோ பைலட் பணிக்கான 9,970 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
RRB ALP Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்கள் | 9970 |
பணிகள் | Assistant Loco Pilot (ALP) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.05.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbapply.gov.in/ |
RRB ALP Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இரயில்வே துறை உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
உதவி லோகோ பைலட் (ALP) | 9,970 |
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ALP மண்டல வாரியாக விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRB ALP Recruitment 2025 கல்வித் தகுதி
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
- மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
- மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த கல்வித்தகுதியானது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ள உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கானதாகும்.
RRB ALP Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இரயில்வே துறை உதவி லோகோ பைலட் (ALP) பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வயது தகுதியானது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ள உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கானதாகும்.
RRB Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மத்திய அரசு ஊதிய கமிஷன் 7-வது ஊதியத்தின் அடிப்படையில் லெவல் 2-சம்பளம் அளிக்கப்படும். அதாவது ஆரம்ப சம்பளமே ரூ.19,900 முதல் வழங்கப்படும். இதுபோக இதர சலுகைகளும் உண்டு.
Railway Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (CBT) நடைபெறும். CBT தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். CBT 1 மற்றும் CBT 2 என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். கணினி வழி தேர்வுக்கு அடுத்தபடியாக, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த தேர்வு முறையின் மூலம், விண்ணப்பதாரர்களின் திறமையும், உடல் தகுதியும் சோதிக்கப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RRB ALP Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதினால் முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இந்த லோகோ பைலட் பணியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்.ஆர்.பி) இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கட்டண முறை: ஆன்லைன்
RRB ALP Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இரயில்வே துறை உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.04.2025 முதல் 11.05.2025 தேதிக்குள் https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து, புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதன் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 12.04.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 11.05.2025