Mayiladuthurai DCPU Recruitment 2024: தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Mayiladuthurai DCPU Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.12.2024 |
பணியிடம் | மயிலாடுதுறை,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://mayiladuthurai.nic.in/ |
Mayiladuthurai DCPU Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Computer Operator (கணினி இயக்குபவர்) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
Computer Operator (கணினி இயக்குபவர்) பணிக்கு:
- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (Senior Grade) முடித்திருக்க வேண்டும்.
- கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Computer Operator (கணினி இயக்குபவர்) | ரூ.11,916 மாதம் வழங்கப்படும். |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Mayiladuthurai DCPU Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://mayiladuthurai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 20.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல் – 609305.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2024
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.