Jobs in UAE 2025: தமிழ்நாடு அரசு வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இடைத்தரகர்களின் வலையில் சிக்காமல்,, அரசின் நேரடி அறிவிப்புகளை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை பெறலாம். ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas Cutter, Piping Foreman உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட நல்ல வாய்ப்பு:
வெளிநாட்டு வேலைக்கு விரும்புபவர்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கியமான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், நேரடியாக அரசு மூலம் இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது உங்களுக்கான தனி சந்தர்ப்பம்!
Jobs in UAE for Indian Overseas Manpower Corporation LTD
Description | Details |
வேலை பிரிவு | வெளிநாட்டு வேலை |
துறைகள் | ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (தமிழக அரசு நிறுவனம்) |
நேர்காணல் தேதி | 31.01.2025 |
பணியிடம் | ஐக்கிய அரபு அமீரகம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.omcmanpower.tn.gov.in |
Jobs in UAE 2025 காலியிட விவரங்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்புகள்!
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (ஓ.எம்.சி.) ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. கீழ்க்கண்ட பணிகளுக்கு திறமையான ஆட்கள் தேவை:
- Welder
- Piping Fabricator
- Piping Fitter
- Structure Fabricator
- Structure Fitter
- Millwright Fitter
- Grinder/Gas Cutter
- Piping Foreman
கல்வி மற்றும் அனுபவம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு கூடுதலாக, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 44 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Jobs in UAE 2025 ஊதியம்:
அந்தந்த பணிக்கேற்ப மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், உணவுடன் கூடிய தங்குமிடம், வேலை வழங்கும் நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும்
- Welder: ரூ.40,000/- முதல் ரூ.78,000/- வரை
- Piping Fabricator: ரூ.40,000/- முதல் ரூ.51,000/- வரை
- Piping Fitter: ரூ.36,000/- முதல் ரூ.42,000/- வரை
- Structure Fabricator: ரூ.42,000/- முதல் ரூ.51,000/- வரை
- Structure Fitter: ரூ.36,000/- முதல் ரூ.42,000/- வரை
- Millwright Fitter: ரூ.42,000/- முதல் ரூ.51,000/- வரை
- Grinder/Gas Cutter: ரூ.30,000/- முதல் ரூ.32,000/- வரை
- Piping Foreman: ரூ.53,000/- முதல் ரூ.60,000/- வரை
Jobs in UAE 2025 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
- விருப்பமுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.01.2025க்குள் அனுப்ப வேண்டும்.
விசா மற்றும் சேவை கட்டணம்:
- விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.35,400/- செலுத்த வேண்டும்.
நேர்காணல்:
- நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9:00 மணி முதல் நடைபெறும்.
- விருப்பம் உள்ளவர்கள் சுயவிவரம், பாஸ்போர்ட் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வர வேண்டும்.
முகவரி:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32
மேலும் விவரங்களுக்கு:
- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in
- தொலைபேசி எண்: 044-22502267
- WhatsApp: 9566239685
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
சிறப்பம்சங்கள்:
- வெளிநாட்டில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் தரமான வேலை வாய்ப்புகள்
- சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான வேலை வாய்ப்புகள்
இந்த சிறந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் கனவு வேலை இங்கே துடிக்கக் காத்திருக்கிறது!