ISRO VSSC Recruitment 2025: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 16 Assistant (உதவியாளர்), Light Vehicle Driver-A(இலகுரக வாகன ஓட்டுநர்), Heavy Vehicle Driver-A(கனரக வாகன ஓட்டுநர்), Fireman-A(தீயணைப்பு வீரர்) மற்றும் Cook(சமையல்காரர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு மற்றும் Degree கல்வித் தகுதி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2025 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? தேவையான கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை என்ன? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.
ISRO: விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முக்கியமான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும். இது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது மற்றும் விண்வெளி தொடர்பான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான VSSC ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
ISRO VSSC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (ISRO VSSC) Vikram Sarabhai Space Centre (ISRO VSSC) |
காலியிடங்கள் | 16 |
பணிகள் | Assistant (உதவியாளர்), Light Vehicle Driver-A(இலகுரக வாகன ஓட்டுநர்), Heavy Vehicle Driver-A(கனரக வாகன ஓட்டுநர்), Fireman-A(தீயணைப்பு வீரர்) மற்றும் Cook(சமையல்காரர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.04.2025 |
பணியிடம் | திருவனந்தபுரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.vssc.gov.in/ |
ISRO VSSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ISRO VSSC விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
உதவியாளர் (ராஜ் பாஷா) (Assistant – Rajbhasha) | 2 |
Light Vehicle Driver-A(இலகுரக வாகன ஓட்டுநர்), | 5 |
Heavy Vehicle Driver-A(கனரக வாகன ஓட்டுநர்), | 5 |
Fireman-A(தீயணைப்பு வீரர்) | 3 |
Cook(சமையல்காரர்) | 1 |
மொத்தம் | 16 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
உதவியாளர் (ராஜ் பாஷா) (Assistant – Rajbhasha)
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் என்ற வேகத்தில் இந்தி தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பயன்பாட்டில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர்-A (Light Vehicle Driver-A)
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செல்லுபடியாகும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக வாகன ஓட்டுநராக மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர்-A (Heavy Vehicle Driver-A)
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் கனரக வாகன ஓட்டுநராகவும், மீதமுள்ள காலம் இலகுரக வாகன ஓட்டுநராகவும் பணிபுரிந்திருக்க வேண்டும்.
தீயணைப்பு வீரர்-A (Fireman-A)
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
சமையலர் (Cook)
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஹோட்டல் / கேன்டீனில் சமையலராக ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
உதவியாளர் (ராஜ் பாஷா) பதவிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் (UR), (OBC),(SC), (ST) மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள் ஆகும்.
இலகுரக வாகன ஓட்டுநர்-A மற்றும் கனரக வாகன ஓட்டுநர்-A ஆகிய பதவிகளுக்கு:
- UR,SC,ST பிரிவினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்.
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) அதிகபட்ச வயது வரம்பு 38 ஆண்டுகள்.
தீயணைப்பு வீரர்-A பதவிக்கு அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள் ஆகும்.
சமையலர் பதவிக்கு அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும்.
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
உதவியாளர் (ராஜ் பாஷா) (Assistant – Rajbhasha) | நிலை 04 (ரூ.25,500 – 81,100/-) |
Light Vehicle Driver-A(இலகுரக வாகன ஓட்டுநர்), | நிலை 02 (ரூ.19,900 – 63,200/-) |
Heavy Vehicle Driver-A(கனரக வாகன ஓட்டுநர்), | நிலை 02 (ரூ.19,900 – 63,200/-) |
Fireman-A(தீயணைப்பு வீரர்) | நிலை 02 (ரூ.19,900 – 63,200/-) |
Cook(சமையல்காரர்) | நிலை 02 (ரூ.19,900 – 63,200/-) |
தேர்வு செயல்முறை
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு (Physical Efficiency Test), மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (Detailed Medical Examination) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள்/ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
ISRO VSSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.04.2025 முதல் 15.04.2025 தேதிக்குள் https://www.vssc.gov.in இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |