CBRI Recruitment 2025: மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு மற்றும் ITI கல்வித் தகுதி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2025 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? தேவையான கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை என்ன? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.
CBRI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் Central Building Research Institute |
காலியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.04.2025 |
பணியிடம் | இந்தியாவில் எங்கும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cbri.res.in/ |
CBRI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Draftsman | 4 |
Instrumentation | 1 |
Electrician | 2 |
Mason | 1 |
Fitter | 1 |
Welder | 1 |
Plumber | 1 |
Medical Lab Technician | 1 |
Computer/IT | 2 |
Digital Photography | 1 |
Mechanic | 2 |
மொத்தம் | 17 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்த முழு விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு விவரங்கள்
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 20-04-2025 அன்று 28 வருடங்கள் ஆக இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு
வகை | தளர்வு |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் ராணுவத்தினர் | அரசாங்க கொள்கையின் படி |
சம்பள விவரங்கள்
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19900/- (அடிப்படை சம்பளம்) மற்றும் அனுமதிக்கப்படும் வழக்கமான படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
CBRI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.03.2025 முதல் 15.04.2025 தேதிக்குள் https://cbri.res.in/ இணையத்தளத்தில் சென்று Click Here to Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு New Candidate Registration பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |