Indian Coast Guard Navik GD Recruitment 2025: இந்திய கடலோர காவல்படை ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது காலியாக உள்ள 300 Navik General Duty GD மற்றும் Navik Domestic Branch DB பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.02.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Indian Coast Guard Navik GD Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய கடலோர காவல்படை Indian Coast Guard |
காலியிடங்கள் | 300 |
பணி | Navik General Duty GD Navik Domestic Branch DB |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://joinindiancoastguard.cdac.in/ |
Indian Coast Guard Navik GD Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Navik General Duty GD | 260 |
Navik Domestic Branch DB | 40 |
மொத்தம் | 300 |
வகை வாரியாக காலியிட விவரங்கள்:
பதவியின் பெயர் | UR | EWS | OBC | SC | ST | Total | ||||
Navik General Duty | 100 | 25 | 68 | 39 | 28 | 260 | ||||
Navik Domestic Branch DB | 16 | 04 | 09 | 08 | 03 | 40 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
Navik General Duty GD பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
Navik Domestic Branch DB பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2003 முதல் 31 ஆகஸ்ட் 2007 வரை இடையில் பிறந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.21,700 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- எழுத்துத் தேர்வு (Written Exam)
- உடல் தகுதி சோதனை (Physical Fitness Test)
- மருத்துவ பரிசோதனை (Medical Test)
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Coast Guard Navik GD Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.02.2025 முதல் 25.02.2025 தேதிக்குள் https://joinindiancoastguard.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் 11.02.2025 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |