DSWO Dindigul Recruitment 2025: தமிழக அரசின் திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi-One Stop Centre) வழக்குப் பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DSWO Dindigul Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம் District Social Welfare Office Dindigul (DSWO Dindigul) சகி ஒருங்கிணைந்த சேவை மையம் |
காலியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.03.2025 |
பணியிடம் | திண்டுக்கல் மற்றும் பழனி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dindigul.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி (Post) | காலியிடம் |
வழக்குப் பணியாளர் | 5 |
பாதுகாவலர் | 2 |
பல்நோக்கு உதவியாளர் | 3 |
மொத்தம் | 10 |
கல்வித் தகுதி
பல்நோக்கு உதவியாளர்
- உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி முன்னுரிமை அளிக்கப்படும்.
- தொடர்புடைய துறையில் பணிபுரியும் அறிவு/அனுபவம் கொண்ட எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வழக்கு பணியாளர்:
- சட்ட இளங்கலை பட்டம் / சமூக பணி இளங்கலை பட்டம் / சமூகவியல் இளங்கலை பட்டம் / சமூக அறிவியல் இளங்கலை பட்டம் / உளவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள்/நிரல்களில் பெண்கள் தொடர்பான தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பாதுகாவலர்
- மாவட்ட/மாநில அளவில் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- முன்னுரிமையாக, அவர்/அவள் ஓய்வு பெற்ற இராணுவ/துணை இராணுவப் பணியாளராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவி (Post) | அதிகபட்ச வயது |
வழக்குப் பணியாளர் | 40 வயது வரை |
பாதுகாவலர் | 45 வயது வரை |
பல்நோக்கு உதவியாளர் | 45 வயது வரை |
சம்பள விவரங்கள்
பதவி (Post) | சம்பள விகிதம் |
வழக்குப் பணியாளர் | மாதம் ரூ.18,000/- |
பாதுகாவலர் | மாதம் ரூ.12,000/- |
பல்நோக்கு உதவியாளர் | மாதம் ரூ.10,000/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சகி ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
DSWO Dindigul Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைத்தளம்), 1 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் 20.03.2025 மாலை 05.45-க்குள் அனுப்பப்பட வேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைத்தளம்), 1 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ, பதிவிக்கப்பட்ட தபாலிலோ அனுப்பலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |