DCDRC Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட கீழ்கண்ட விவரப்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DCDRC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பெரம்பலூர் |
வேலை பெயர் | அலுவலக உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 11.07.2025 |
பணியிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://perambalur.nic.in/ |
DCDRC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அலுவலக உதவியாளர் – பல்வேறு காலியிடம்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DCDRC Perambalur Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCDRC Perambalur Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
DCDRC Perambalur Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
குறிப்பு: நேர்காணல் தேதியும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்
DCDRC Perambalur Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
DCDRC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://perambalur.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர், கல்வித்தகுதி, மாற்றுச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயது, முகவரி மற்றும் பிற தகுதிச் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர்” என்று உறையின் மேல் குறிப்பிட்டு, கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் 11.07.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், மாவட்ட குறைதீர் ஆணையம், 2வது தெரு, கணபதி நகர், எளம்பலூர் ரோடு, பெரம்பலூர் – 621 212.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.07.2025
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் அனைத்து தகுதிநிலைகளையும் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக படித்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.