Cordite Factory Aruvankadu Recruitment 2024: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு வெடிமருத்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு காலியாகவுள்ள 141 CPW Personnel பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான வெடிப்பொருட்களை தயாரிக்கு தொழிற்சாலையாக கார்டைட் தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Cordite Factory Aruvankadu Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Cordite Factory கார்டைட் தொழிற்சாலை |
காலியிடங்கள் | 141 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 23.12.2024 |
பணியிடம் | நீலகிரி மாவட்டம். தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ddpdoo.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
CPW Personnel | 141 |
141 காலிப்பணியிடங்களில் பொது பிரிவில் 58 இடங்கள், ஓபிசி பிரிவில் 38 இடங்கள், எஸ்சி பிரிவில் 21 இடங்கள், எஸ்டி பிரிவில் 10 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 14 இடங்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 14 இடங்கள் நிரப்பப்படும். எஸ்/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலில் AOCP Trade பிரிவில் NAC / NTC பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
CPW Personnel | 18 வயது முதல் 35 வயது வரை |
வயது வரம்பு தளர்வுகள்:
பிரிவு | தளர்வு |
---|---|
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC (Non-Creamy Layer) | 3 ஆண்டுகள் |
Ex-SM | இராணுவ சேவை காலம் + 3 ஆண்டுகள் |
வயது வரம்பு குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,900 அடிப்படைச் சம்பளம் மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பணிப்பொறுப்புப்படி (டிஏ) வழங்கப்படும். இந்தப் பணி ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமாகும். பணியின் தேவைக்கேற்ப இந்தக் காலம் மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்படலாம். பணி நிரந்தரமாக மாற்றப்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் என்சிவிடி மதிப்பெண், டிரேட் தேர்வு( Trade Test)/ செய்முறை தேர்வு (Practical test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் https://ddpdoo.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்களுடன் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 23.12.2024
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu. Pin – 643 202.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |