Chennai OSC Recruitment 2024: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த சேவை மையங்களை (one stop Centre) நிறுவி இயக்கி வருகிறது. இதில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்போது காலியாகவுள்ள வழக்கு பணியாளர் (Case Worker), பாதுகாப்புப் பணியாளர் (Security Guard), பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
செய்தி வெளியீடு
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (One1 Stop Centre), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை,2 காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்3 என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | Chennai One Stop Centre ஒருங்கிணைந்த சேவை மையம் |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 06.12.2024 |
பணியிடம் | சென்னை,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.chennai.nic.in |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
Chennai OSC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
S.No | வேலை பெயர் | காலியிடம் |
---|---|---|
1 | வழக்கு பணியாளர் (Case Worker) | 01 |
2 | பாதுகாப்புப் பணியாளர் (Security Guard) | 02 |
3 | பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) | 02 |
மொத்தம் | 05 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
வழக்கு பணியாளர் (Case Worker)
- கல்வித் தகுதி: வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும்.
- அனுபவம்: அரசு அல்லது அரசு சாரா திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் பணி அனுபவம் மற்றும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
- பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.
பாதுகாப்புப் பணியாளர் (Security Guard)
- தகுதி: 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.. அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்.
- பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
- தகுதி: 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
- பணி: உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். இது ஒப்பந்த அடிப்படையிலான (Contract Based) பணி ஆகும்.
- பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.
வயது வரம்பு விவரங்கள்
வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை
சம்பள விவரங்கள்
S.No | வேலை பெயர் | சம்பளம் |
---|---|---|
1 | வழக்கு பணியாளர் (Case Worker) | ரூ.18,000/- |
2 | பாதுகாப்புப் பணியாளர் (Security Guard) | ரூ.12,000/- |
3 | பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) | ரூ.10,000/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Chennai OSC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 06.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரிக்கு1 நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2024
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
- இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.