Saturday, April 19, 2025
HomeAny Degree Govt Jobsஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - 309 காலியிடங்கள்; ரூ.40,000 சம்பளம் || உடனே...

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 309 காலியிடங்கள்; ரூ.40,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் AAI Recruitment 2025

AAI Recruitment 2025: இந்திய விமான நிலைய ஆணையம் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 309 Junior Executive (Air Traffic Control)/ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
Airports Authority of India (AAI)
காலியிடங்கள்309
பணி Junior Executive (Air Traffic Control)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.05.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 https://www.aai.aero/

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு)/Junior Executive (Air Traffic Control) – 309 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive (Air Traffic Control) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

  • முழு நேர அறிவியல் இளங்கலைப் பட்டம் (B.Sc): இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று வருடங்கள் முழு நேரப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

  • முழு நேர பொறியியல் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree in Engineering): எந்த ஒரு பொறியியல் பிரிவிலும் முழு நேரப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:

விண்ணப்பதாரர் தனது 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்புப் பள்ளிப் படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive (Air Traffic Control) பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
  • முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் படி

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive (Air Traffic Control) பணிக்கு பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40000 – 3% – 140000/- வழங்கப்படும்.

இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
  • Application Verification/ Voice Test/ Psychoactive Substances Test/ Psychological Assessment/ Physical Medical Examination/ Background Verification (as applicable for the post)
  • பெண்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.04.2025 முதல் 24.05.2025 தேதிக்குள் https://www.aai.aero/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்25.04.2025 முதல்
விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments