UPSC IAS Recruitment 2025: ஆண்டுதோறும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில், உள்ளிட்ட 21 குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளில் உள்ள பணி இடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி (UPSC) மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில், மாவட்ட ஆட்சியர், காவல் துறை, வெளியுறவுத்துறை, தணிக்கை துறை, தபால் துறை போன்ற முக்கிய பதவிகள் அடங்கும். தற்போது, 979 இந்திய நிர்வாக சேவை அதிகாரி (IAS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.02.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
இந்திய நிர்வாக சேவை (IAS):
IAS என்பது இந்திய நிர்வாக சேவையை (Indian Administrative Service) குறிக்கிறது. யுபிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் IAS போன்ற முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவர். இவர்கள் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பைப் பெறுவர். இந்த தேர்வு மற்றும் பணியிடங்கள் நிரப்பும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளடங்கியுள்ளன. எனவே, இதனை முழுமையாக படித்து, தகுதியானவர்கள் தேர்வு செயல்முறையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
UPSC IAS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய நிர்வாக சேவை (IAS) |
காலியிடங்கள் | 979 |
பணி | இந்திய நிர்வாக சேவை அதிகாரி (IAS) (Indian Forest Services Officer) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsc.gov.in/ |
UPSC IAS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS Indian Administrative Services Officer (IAS) | 979 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, இதற்கு சமமான தகுதியை பெற்றவர்களும் இந்தத் தேர்வுக்கு தகுதியானவராக கொள்ளப்படுவர்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- முதற்கட்ட தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 100/-
- கட்டண முறை: ஆன்லைன்
UPSC IAS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய நிர்வாக சேவை அதிகாரி IAS வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.01.2025 முதல் 11.02.2025 தேதிக்குள் https://upsconline.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |