TN MRB Recruitment 2025: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது காலியாக உள்ள 21 Skilled Assistant (திறமையான உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN MRB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board) |
காலியிடங்கள் | 21 |
பணி | Skilled Assistant |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://mrb.tn.gov.in/ |
TN MRB Skilled Assistant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Skilled Assistant (திறமையான உதவியாளர்) – 21 காலியிடங்கள்
பதவி பெயர் | காலியிடங்கள் |
Skilled Assistant Grade-II (Fitter Grade-II) | 20 |
Skilled Assistant Grade-II (Welder Grade-II) | 1 |
மொத்தம் | 21 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN MRB Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Skilled Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட கல்விதகுதிகள் பெற்றிருக்க வேண்டும்
திறமையான உதவியாளர் கிரேடு-II (Fitter Grade-II)
- SSLC அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.
- மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பிரிவில் தேசிய வர்த்தகச் சான்றிதழ் National Trade Certificate (NTC) பெற்றிருக்க வேண்டும்.
- மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பிரிவில் தேசிய பயிற்சிச் சான்றிதழ் National Apprentice Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.
திறமையான உதவியாளர் கிரேடு-II (Welder Grade-II)
- SSLC அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.
- வெல்டர் (Welder Trade) பிரிவில் தேசிய வர்த்தகச் சான்றிதழ் National Trade Certificate (NTC) பெற்றிருக்க வேண்டும்.
- வெல்டர் (Welder Trade) பிரிவில் தேசிய பயிற்சிச் சான்றிதழ் National Apprentice Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.
TN MRB Skilled Assistant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Skilled Assistant பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- திறமையான உதவியாளர் (Fitter Grade-II) (பொது விண்ணப்பதாரர்கள்): 18 முதல் 32 வயது வரை
- திறமையான உதவியாளர் (Fitter Grade-II) (SC/ST/BC/BCM/MBC விண்ணப்பதாரர்கள்): அதிகபட்ச வயது வரம்பு இல்லை
- திறமையான உதவியாளர் (Welder Grade-II) (ST விண்ணப்பதாரர்கள்): 01.07.2025 அன்று அதிகபட்சம் 59 வயது (01.07.1966 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்).
TN MRB Skilled Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Skilled Assistant பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- திறமையான உதவியாளர் (Fitter Grade-II): மாதத்திற்கு ₹19,500–₹71,900 (நிலை-8) சம்பளம் வழங்கப்படும்.
- திறமையான உதவியாளர் (Welder Grade-II): மாதத்திற்கு ₹19,500–₹71,900 (நிலை-8) சம்பளம் வழங்கப்படும்.
TN MRB Skilled Assistant Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் Skilled Assistant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- தகுதிப் பட்டியல் (தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில்)
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்:
- SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN MRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.06.2025 முதல் 01.07.2025 தேதிக்குள் https://mrb.tn.gov.in/ இணையதளத்தில் சென்று “New User” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Skilled Assistant (Fitter) அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Skilled Assistant (Welder) அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |