Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 - அலுவலக உதவியாளர் வேலை; 10வது தேர்ச்சி போதும்...

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 – அலுவலக உதவியாளர் வேலை; 10வது தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது! TN Collector Office Recruitment 2025

TN Collector Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் துவங்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்தில் காலியாகவுள்ள Office Assistant (அலுவலக உதவியாளர்), Data Entry Operator and Computer Assistant டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கணினி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வேலை பெயர்அலுவலக உதவியாளர்,
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும்
கணினி உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.02.2025
பணியிடம்தென்காசி,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tenkasi.nic.in/

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அலுவலக உதவியாளர் – 01 காலியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கணினி உதவியாளர் – 02 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், கணினியில் MS Office பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கீழ்நிலை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர்: இந்த பதவிக்கு மாதம் ரூ.8,000/- சம்பளம் வழங்கப்படும்.
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கணினி உதவியாளர்: இந்த பதவிக்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தை https://tenkasi.nic.in என்ற இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், உங்களுடைய கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 15.02.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தென்காசி – 627 811.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் அனைத்து தகுதிநிலைகளையும் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக படித்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

அலுவலக உதவியாளர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு &
விண்ணப்ப படிவம்
Click Here
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு &

விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments