Salem District Supply and Marketing Society Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் இயங்கும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் காலியாகவுள்ள 02 கணக்காளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
Salem District Supply and Marketing Society Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் |
காலியிடங்கள் | 02 |
பணிகள் | கணக்காளர் மற்றும் இரவுக்காவலர் |
பணியிடம் | சேலம் – தமிழ்நாடு |
கடைசி தேதி | 15.04.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
கணக்காளர் | 01 |
இரவுக்காவலர் | 01 |
மொத்தம் | 02 |
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2025க்கான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:
- கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு (Commerce Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவுக்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:
கணக்காளர் பதவிக்கு 1 ஆண்டுக்கு குறைவான மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கும் ரூ.15,000/- வரைவூதியம், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.17,000/- வரைவூதியம், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.20,000/- வரைவூதியம், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.25,000/- வரைவூதியம் ஊதியமாக வழங்கப்படும்.
இரவுக்காவலர் பதவிக்கு, 1 ஆண்டுக்கு குறைவான மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கும் ரூ.10,000/- வரைவூதியம், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.12,000/- வரைவூதியம், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.15,000/- வரைவூதியம், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் ரூ.18,000/- வரைவூதியம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Tamilnadu Government Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Salem District Supply and Marketing Society Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் (Resume/Cv) தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, வரும் 15.04.2025 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மேலாளர், தருமங்கலம் நகரப்பற வாணிபதாரர் மையம், அறை எண்.207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மேலாளர், தருமங்கலம் நகரப்பற வாணிபதாரர் மையம், அறை எண்.207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |