Saturday, April 19, 2025
Home10th Pass Govt Jobsதென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் 1007 காலியிடங்கள் - தேர்வு கிடையாது || உடனே அப்ளை...

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் 1007 காலியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே அப்ளை பண்ணுங்க! RRC South East Central Railway Recruitment 2025

RRC South East Central Railway Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது தென்கிழக்கு மத்திய ரயில்வே (South East Central Railway) துறையில் காலியாகவுள்ள 1007 அப்ரண்ட்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தென்கிழக்கு மத்திய ரயில்வே
South East Central Railway
காலியிடங்கள்1007
பணிஅப்ரண்ட்டிஸ் (Apprentices)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி04.05.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://secr.indianrailways.gov.in/

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Apprentices/அப்ரண்ட்டிஸ்1007
மொத்தம்1007

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தது 50% மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய துறைகளில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது வரம்பில் தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
முன்னாள் வீரர்கள்அரசாங்க கொள்கையின்படி

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, அப்ரண்ட்டிஸ் பயிற்சி விதிமுறைகளின்படி மாதந்தோறும் ₹7,700 முதல் ₹8,050 வரை சம்பளம் வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification): தகுதி பட்டியலில் இடம்பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
  • மருத்துவ உடற்தகுதி சோதனை (Medical Fitness Test): ஆவண சரிபார்ப்பில் தகுதி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு: தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் வட மாநிலங்களில் பணியமத்த்தப்படுவார்கள்.

  • ST/SC/பெண்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.04.2025 முதல் 04.05.2025 தேதிக்குள் NAPS இணையதளமான https://www.apprenticeshipindia.gov.in/ சென்று Candidate ஆகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அவர்கள் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை) 8767610437 என்ற மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments