RRB Group D Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் ‘D’ பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB Group D ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 32438 குரூப் D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ரயில்வே குரூப் D வேலைவாய்ப்பு ஆனது 2018 ஆம் ஆண்டில் 62097 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 103769 பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. அதன்பின் 5 வருடங்கள் கழித்து தற்போது 32438 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிக்கவும்.
RRB Group D Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்கள் | 32438 குரூப் D |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 22.02.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbapply.gov.in/ |
RRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இரயில்வே துறை Group D வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- குரூப் D (Group D) – 32438 காலிப்பணியிடங்கள்
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்:
RRB குரூப் D காலியிடங்கள் 2025 | ||
வேலை பெயர் | துறை | காலியிடங்கள் |
Pointsman-B | Traffic | 5058 |
Assistant (Track Machine) | Engineering | 799 |
Assistant (Bridge) | Engineering | 301 |
Track Maintainer Gr. IV | Engineering | 13187 |
Assistant P-Way | Engineering | 247 |
Assistant (C&W) | Mechanical | 2587 |
Assistant TRD | Electrical | 1381 |
Assistant (S&T) | S&T | 2012 |
Assistant Loco Shed (Diesel) | Mechanical | 420 |
Assistant Loco Shed (Electrical) | Electrical | 950 |
Assistant Operations (Electrical) | Electrical | 744 |
Assistant TL & AC | Electrical | 1041 |
Assistant TL & AC (Workshop) | Electrical | 624 |
Assistant (Workshop) (Mech) | Mechanical | 3077 |
மொத்தம் | 32438 |
ரயில்வே இடங்கள் வாரியாக காலியிடங்கள் விபரம்:
ரயில்வே | காலியிடங்கள் |
தெற்கு ரயில்வே (சென்னை) | 2694 |
மேற்கு ரயில்வே (மும்பை) | 4672 |
வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்) | 1433 |
தென்மேற்கு ரயில்வே (ஹுப்ளி) | 503 |
மேற்கு மத்திய ரயில்வே (ஜபல்பூர்) | 1614 |
கிழக்கு கடலோர ரயில்வே (புவனேஸ்வர்) | 964 |
தென்கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) | 1337 |
வடக்கு ரயில்வே (புதிய தில்லி) | 4785 |
வடகிழக்கு ரயில்வே (கொரக்பூர்) | 1370 |
வடகிழக்கு எல்லை ரயில்வே (கவுகாத்தி) | 2048 |
கிழக்கு ரயில்வே (கொல்கத்தா) | 1817 |
மத்திய ரயில்வே (மும்பை) | 3244 |
கிழக்கு மத்திய ரயில்வே (ஹஜிபூர்) | 1251 |
வடமத்திய ரயில்வே (பிரயாக்ராஜ்) | 2020 |
தென்மத்திய ரயில்வே (சிகந்தராபாத்) | 1642 |
தென்கிழக்கு ரயில்வே (கொல்கத்தா) | 1044 |
மொத்த காலியிடங்கள் | 32,438 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRB Group D Recruitment 2025 கல்வித் தகுதி
இரயில்வே துறை குரூப் D பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது தேர்ச்சி (அல்லது) ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RRB Group D Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்திய இரயில்வே துறை Group D வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
RRB Group D Recruitment 2025 சம்பள விவரங்கள்
இரயில்வே துறை குரூப் D பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.18000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RRB Group D Recruitment 2025 தேர்வு செயல்முறை
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு (DV) மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கணினி வழி தேர்வுக்கான பாடத்திட்டங்கள் ( Syllabus ):
பிரிவுகள் | கேள்விகள் | மதிப்பெண்கள் |
பொதுவான அறிவியல் (General Science) | 25 | 25 |
கணிதம் (Mathematics) | 25 | 25 |
(General Intelligence & Reasoning) | 30 | 30 |
(General Awareness and Current Affairs) பொதுவான தகவல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் | 20 | 20 |
மொத்தம் | 100 | 100 |
மொத்தம்:
- கேள்விகள்: 100
- மதிப்பெண்கள்: 100
தேர்வு காலம் (Exam Duration):
- தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்: 90 நிமிடங்கள்
RRB Group D Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD/Women/Ex-Serviceman/Transgender/ விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 250/- கணினி அடிப்படையிலான தேர்வின் போதும் விண்ணப்ப கட்டணம் ரூ.250 திருப்பி கொடுக்கப்படும்.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/- கணினி அடிப்படையிலான தேர்வின் போதும் விண்ணப்ப கட்டணம் ரூ.400 திருப்பி கொடுக்கப்படும்.
- கட்டண முறை: ஆன்லைன்
RRB Group D Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.01.2025 முதல் 22.02.2025 தேதிக்குள் https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |