Thursday, March 20, 2025
HomeB.E/B.Techதேர்வு கிடையாது; ரயில்வே துறையின் கீழ் RITES நிறுவனத்தில் 223 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்...

தேர்வு கிடையாது; ரயில்வே துறையின் கீழ் RITES நிறுவனத்தில் 223 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும் RITES Recruitment 2024

RITES Recruitment 2024: மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 223 Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்வே கீழ் RITES நிறுவனம் இயங்கி வருகிறது. ரயில்களில் போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்ரயில்வே துறை RITES நிறுவனம்
காலியிடங்கள்223 Apprentice
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி25.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rites.com/

ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Apprentice பிரிவுகாலிப்பணியிடங்கள்
Graduate Apprentice Apprentice141
Diploma Apprentice Apprentice36
Trade Apprentice Apprentice46
மொத்தம்223

தொழிற்பயிற்சி இடங்கள் பட்டப்படிப்பு தகுதி, டிப்ளமோ தகுதி மற்றும் ஐடிஐ தகுதி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பட்டப்படிப்பு தகுதி:

  • பொறியியல் பிரிவு: சிவில், கட்டடக் கலை, எலெக்ட்ரிக்கல், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, மெக்கானிக்கல், கெமிக்கல்/உலோகவியல் ஆகிய துறைகளில் மொத்தம் 112 இடங்கள் நிரப்பப்படுகிறது.
  • பொறியியல் அல்லாத பிரிவு: நிதி மற்றும் மனிதவள (HR) துறைகளில் மொத்தம் 29 இடங்கள் நிரப்பப்படுகிறது.

டிப்ளமோ தகுதி:

  • சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல்/உலோகவியல் துறைகளில் மொத்தம் 36 இடங்கள் நிரப்பப்படும்.

ஐடிஐ தகுதி:

  • CAD ஆப்ரேட்டர், வரைவாளர், எலெக்ட்ரிஷன் மற்றும் பிற தொழில் துறைகளில் மொத்தம் 46 இடங்கள் நிரப்பப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Graduate Apprentice – பட்டப்படிப்பு தகுதி:

  • இந்த பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் (BE / B.Tech / B.Arch) – நான்கு வருட முழுநேர கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ENGINEERING அல்லாத பணியிடங்களுக்கு கலை மற்றும் அறிவியல் துறைகளில் (BA / BBA / B.Com / B.Sc / BCA) – மூன்று வருட பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்

Diploma Apprentice – டிப்ளமோ தகுதி:

  • இதற்கான தகுதியாக, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 வருடங்கள் முழுநேர பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Trade Apprentice – ஐடிஐ தகுதி:

  • சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும்.

ரயில்வே துறை RITES நிறுவனம் Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதை நிறைந்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் மற்றும் முழுமையான விவரங்களை அறிய, கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Apprenticeshipஉதவித்தொகை
Graduate Apprenticesரூ.14000/- மாதம்
Technician Apprenticesரூ.12000/- மாதம்
Trade Apprenticeரூ.10000/- மாதம்

ரயில்வே துறை RITES நிறுவனம் பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை என்பது விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாக இருக்கும். குறிப்பாக, பொது பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் தேவை. அதேவேளை, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் தேவை. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ரயில்வே துறை RITES நிறுவனம் Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் https://nats.education.gov.in/student_type.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, https://www.rites.com/ என்ற இணையதளத்தில் உள்ள https://forms.gle/S9CFJ7YYx4JyKMgw5 என்ற கூகுள் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

RITES அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
RITES விண்ணப்ப படிவம்Click Here
Graduate Apprentice பணியிடங்களுக்கு
NATS இணையதளத்தில் பதிவு செய்ய
Click Here
Diploma Apprentice பணியிடங்களுக்கு
NATS இணையதளத்தில் பதிவு செய்ய
Click Here
ITI Apprentice பணியிடங்களுக்கு
NAPS இணையதளத்தில் பதிவு செய்ய
Click Here
RITES அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:25.12.2024

மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments