Nilgiris DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் நீலகிரி மாவட்டத்தின் மாவட்ட நலச் சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள 07 லேப் டெக்னீஷியன், டிரைவர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Nilgiris DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்ட நலச் சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் |
காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 09.04.2025 |
பணியிடம் | நீலகிரி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nilgiris.nic.in/ |
Nilgiris DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடம் |
Medical Officer (மருத்துவ அலுவலர்) | 1 |
District PPM Coordinator (மாவட்ட பொது மற்றும் தனியார் கலப்பு ஒருங்கிணைப்பாளர்) | 1 |
Senior Treatment Lab Supervisor | 1 |
Senior Treatment Supervisor | 1 |
Lab Technician (லேப் டெக்னீஷியன்) | 2 |
Driver (டிரைவர்) | 1 |
மொத்தம் | 07 |
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி | கல்வித் தகுதி |
Medical Officer | MBBS Degree |
District PPM Coordinator | PG Degree |
Senior Treatment Lab Supervisor | Any Degree with Diploma in Medical Lab Technology (DMLT) |
Senior Treatment Supervisor | Any Degree with Sanitary Inspector Course |
Lab Technician | Diploma in Medical Lab Technology |
Driver | 12th Pass with Heavy Driving License |
சம்பள விவரங்கள்
பதவி | சம்பள விகிதம் |
Medical Officer | மாதம் ரூ.60,000 |
District PPM Coordinator | மாதம் ரூ.26,500 |
Senior Treatment Lab Supervisor | மாதம் ரூ.19,800 |
Senior Treatment Supervisor | மாதம் ரூ.19,800 |
Lab Technician | மாதம் ரூ.13,000 |
Driver | மாதம் ரூ.13,500 |
தேர்வு செயல்முறை
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Nilgiris DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (BIO DATA) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அரசு அலுவலர்கள் (A அல்லது B நிலையில் உள்ளவர்கள்) மூலம் சான்றொப்பம் (attested) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தபால் உறையின் மேல் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்தப் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன், ரூ.25 மதிப்புள்ள தபால் தலைகள் ஒட்டப்பட்ட, விண்ணப்பதாரரின் முகவரியிட்ட இரண்டு கவர்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 09.04.2025 (மாலை 5.00 மணிக்குள்). தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், ஜெயில் ஹில் ரோடு, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம், உதகமண்டலம் – 643001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு: மேலும், இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.