Naval Dockyard Vizag Recruitment 2024: இந்திய கடற்படை கப்பல் துறை நேவல் டாக்யார்டு(Naval Dockyard) காலியாகவுள்ள 275 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | கடற்படை கப்பல் துறை நேவல் டாக்யார்டு |
காலியிடங்கள் | 275 அப்ரண்டிஸ் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 02.01.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.joinindiannavy.gov.in/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
Naval Dockyard Vizag Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படை கப்பல் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
அப்ரண்டிஸ் | 275 |
மொத்தம் | 275 |
Trades வாரியான காலியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Mechanic Diesel | 25 |
Machinist | 10 |
Mechanic (Central AC Plant, Industrial Cooling & Package Air Conditioning) | 10 |
Foundryman | 05 |
Fitter | 40 |
Pipe Fitter | 25 |
Mechanic Machine Tool Maintenance | 05 |
Electrician | 25 |
Instrument Mechanic | 10 |
Electronics Mechanic | 25 |
Welder (Gas and Electric) | 13 |
Sheet Metal Worker | 27 |
Shipwright (Wood) | 22 |
Painter (General) | 13 |
Mechanic Mechatronics | 10 |
Computer Operator and Programming Assistant | 10 |
மொத்தம் | 275 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: 10வது,12வது,டிகிரி தேர்ச்சி போதும்! மத்திய அரசில் மாதம் ரூ.35,400/- சம்பளத்தில் உதவியாளர் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்
கல்வித் தகுதி
இந்திய கடற்படை கப்பல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து குறைந்தது 50% மதிப்பெண்களுடன் மேட்ரிக் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்த மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு விவரங்கள்
- கடற்படை கப்பல் துறை அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
இந்திய கடற்படை கப்பல் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.7700/- மற்றும் இரண்டு வருட ITI சான்றிதழ் பெற்றவர்களுக்கு ரூ.8050/- சம்பளம் வழங்கப்படும்
சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
இந்திய கடற்படை கப்பல் துறை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம் 30, பொது அறிவியல் 30, பொது அறிவு 15 என மொத்தம் 75 பன்முகத் தேர்வு கேள்விகள் ஆங்கில மொழியில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்.
Naval Dockyard Vizag Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடற்படை கப்பல் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.apprenticeshipindia.gov.in 28.11.2024 முதல் 27.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- முதலில் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் “Cadidate” ஆக Register செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள “Apprenticeship Opportunities” என்பதைக் கிளிக் செய்து, “Search by Establishment Name” என்ற பட்டியில் “NAVAL DOCKYARD” (Establishment ID: E08152800002) என்பதை எழுத்து முத்திரையில் உள்ளீடு செய்து தேர்வு செய்யவும். இதன்படி, விஸாகப்பட்டினம் கடற்படை துறையின் பட்டியல் தோன்றும். பின்னர் “Apply” பட்டனை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட தேர்வு செயல்முறைகளை முடிக்கவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam – 530 014, Andhra Pradesh
- விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி 02 ஜனவரி 2025.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |