Madurai Railway Higher Secondary School Recruitment 2025: மத்திய அரசின் கீழ் இயங்கும் மதுரையில் உள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் (CBSE பாடத்திட்டம்), முதுகலை ஆசிரியர்(Post Graduate Teacher), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(Trained Graduate Teacher) மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்(Primary Teachers) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA தேர்ச்சி போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, இப்பணியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 06.04.2025 என்ற கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற முக்கியமான விவரங்கள் அனைத்தையும் இங்கே விரிவாக காணலாம்.
Madurai Railway Higher Secondary School Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி (CBSE), Madurai Railway Higher Secondary School- Railway Higher Secondary School (CBSE), |
காலியிடங்கள் | 06 |
பணிகள் | Post Graduate Teacher, Trained Graduate Teacher, Primary Teachers |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 06.04.2025 |
பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sr.indianrailways.gov.in/ |
Madurai Railway Higher Secondary School Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Post Graduate Teacher (Biology) | 1 |
Post Graduate Teacher (Economics) | 1 |
Post Graduate Teacher (Commerce) | 1 |
Trained Graduate Teacher (Hindi) | 1 |
Primary Teacher (Hindi) | 1 |
Primary Teacher | 1 |
மொத்தம் | 06 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
1. பதவி பெயர்: Post Graduate Teacher (Biology)/முதுகலை ஆசிரியர் (உயிரியல்)
- கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- தாவரவியல், விலங்கியல், உயிர் அறிவியல், உயிரித்தொழில்நுட்பம், மரபியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் (M.Sc.) பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கில வழி கற்பித்தலில் திறமையானவராக இருக்க வேண்டும்.
2. பதவி பெயர்: Post Graduate Teacher (Economics)/முதுகலை ஆசிரியர் (பொருளாதாரம்)
- கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- பொருளாதாரம், பயன்பாட்டுப் பொருளாதாரம் அல்லது வணிகப் பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் கற்பிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும்.
3. பதவி பெயர்: Post Graduate Teacher (Commerce)/முதுகலை ஆசிரியர் (வணிகவியல்)
- கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் கற்பிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும்.
4. பதவி பெயர்: Trained Graduate Teacher (Hindi)/பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (ஹிந்தி)
- கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- ஹிந்தியில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- ஹிந்தியில் கற்பிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும்.
5. பதவி பெயர்: Primary Teacher (Hindi)/ஆரம்ப பள்ளி ஆசிரியர் (ஹிந்தி)
- தொடக்கக் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஹிந்தியில் கற்பிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும்.
6. பதவி பெயர்: Primary Teacher/ஆரம்ப பள்ளி ஆசிரியர்
- தொடக்கக் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் கற்பிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Post Graduate Teacher (Biology) | 18 வயது முதல் 65 வயது வரை |
Post Graduate Teacher (Economics) | 18 வயது முதல் 65 வயது வரை |
Post Graduate Teacher (Commerce) | 18 வயது முதல் 65 வயது வரை |
Trained Graduate Teacher (Hindi) | 18 வயது முதல் 65 வயது வரை |
Primary Teacher (Hindi) | 18 வயது முதல் 65 வயது வரை |
Primary Teacher | 18 வயது முதல் 65 வயது வரை |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Post Graduate Teacher (Biology) | மாதம் ரூ.27,500 |
Post Graduate Teacher (Economics) | மாதம் ரூ.27,500 |
Post Graduate Teacher (Commerce) | மாதம் ரூ.27,500 |
Trained Graduate Teacher (Hindi) | மாதம் ரூ.26,250 |
Primary Teacher (Hindi) | மாதம் ரூ.21,250 |
Primary Teacher | மாதம் ரூ.21,250 |
தேர்வு செயல்முறை
மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Madurai Railway Higher Secondary School Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.03.2025 முதல் 06.04.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை (Google Form) பூர்த்தி செய்து, பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- படிவத்தை பூர்த்தி செய்யும் போது ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். நேர்முகத் தேர்வின் போது அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- முழுமையற்ற அல்லது தவறாக பூர்த்தி செய்யப்பட்ட கூகிள் படிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Google Form விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |