ITBP Constable Recruitment 2025: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo Tibetan Border Police Force (ITBP)) துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ITBPF இல் குரூப் ‘சி’ பிரிவில் காலியாகவுள்ள 133 Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ITBP Constable Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) |
காலியிடங்கள் | 133 |
பணிகள் | Constable (General Duty) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 02.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | itbpolice.nic.in |
ITBP Constable Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் குரூப் ‘ சி ‘ பிரிவில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Constable (General Duty) – 133 காலிப்பணியிடங்கள்
விளையாட்டு வாரியாக காலியிடங்கள் விபரம்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indo Tibetan Border Police Force Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வி தகுதி குறித்த மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ITBP Constable Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
ITBP Constable Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ITBP Constable Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வு, உடல் ரீதியான தரநிலை சோதனை, ஆவணங்களின் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மறுபரிசீலனை மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ITBP Constable Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி/ எஸ்டி/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General/ OBC/ UR/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 100/-
- கட்டண முறை: ஆன்லைன்
ITBP Constable Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.03.2025 முதல் 02.04.2025 தேதிக்குள் https://recruitment.itbpolice.nic.in/ அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று Registration செய்து பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். Registration மற்றும் Login செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் ITBP Registration Link | Click Here |
ITBP Login Link | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |