Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobs10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தேர்வு கிடையாது! || உடனே...

10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தேர்வு கிடையாது! || உடனே அப்ளை பண்ணுங்க IOB Tenkasi Recruitment 2024

IOB Tenkasi Recruitment 2024: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவிய “SNEHA” அறக்கட்டளையில், காலியாக உள்ள Attender (அட்டெண்டர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவிய “SNEHA” அறக்கட்டளை, 14 கிராமப்புற சுயதொழில் பயிற்சி நிறுவனங்களை (RSETIs) செயல்படுத்தி வருகிறது. RSETI-கள், வேலை இல்லாமை பிரச்சினையை தீர்க்க, இளைஞர்களுக்கு தீவிர பயிற்சிகள், உந்துதல், மற்றும் செய்முறை வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் அவர்களை சுயதொழிலுக்கு தயார்ப்படுத்துதல் மற்றும் பணியமைப்பிற்கான பின்தொடர்புகள்/உதவி சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை அனைத்தும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் (MoRD) வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுகின்றன.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்Attender (உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி18.12.2024
பணியிடம்தென்காசி, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.iob.in/Careers

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Attender (அட்டெண்டர்)01

அட்டெண்டர் (Attender) பணி ஒப்பந்தம் 3 ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும், அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறக்கட்டளை மூலம் ஒப்பந்தத்தின் ஆண்டு மறுஆய்வும் புதுப்பிப்பும் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அட்டெண்டர் (Attender) பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் அறிந்திருக்க வேண்டும்.

அட்டெண்டர் (Attender) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தது 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்கவும் வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்த பணிக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சேவை மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ.1,000/- ஆண்டு செயல்திறன் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அறிவிப்பு அடிப்படையில் மாதம் ரூ.1,000/- பயணத்தொகை (FCA) மற்றும் மாதம் ரூ.300/- மொபைல் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இலவசமாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணையதளமான https://www.iob.in/ ல் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை:

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
RSETI Tenkasi,
Plot No. 1, Door No. 2/10/59,
High Land City,
Elathur to Tenkasi Road,
Tenkasi – 627803.

Email – [email protected]

தொலைபேசி எண் – 0462-2310307 / 2310315 , 9500870344

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுடைய விண்ணப்பங்களே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 10.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments