Indian Navy SSR Medical Assistant Recruitment 2025: இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailors – SSR (Medical Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.04.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் என்னென்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
இந்திய கடற்படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கடற்படையில் காலியாக உள்ள (Sailor in Medical Branch) எஸ்.எஸ்.ஆர் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Indian Navy SSR Medical Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியக் கடற்படை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Sailors – SSR (Medical Assistant) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.04.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.joinindiannavy.gov.in |
Indian Navy SSR Medical Assistant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Sailors – SSR (Medical Assistant) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Navy Recruitment 2025 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களையும் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். மேலும், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடற்படை SSR (Medical Assistant) 2025-க்கான வயது வரம்பு விவரங்கள்:
SSR (MED) 02/2025 Batch : : விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2004 முதல் 29 பிப்ரவரி 2008 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.
SSR (MED) 02/2026 Batch: விண்ணப்பதாரர்கள் 01 ஜூலை 2005 முதல் 31 டிசம்பர் 2008 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
இந்தியக் கடற்படை Sailors – SSR (Medical Assistant) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்வு செயல்முறை
இந்தியக் கடற்படை SSR Medical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Indian Navy Entrance Test, PFT, Written Examination and Recruitment Medical ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ. 60 + ஜிஎஸ்டி
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Navy SSR Medical Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியக் கடற்படை SSR Medical Assistant வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.03.2025 முதல் 16.04.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 29.03.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 16.04.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)